காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடை பெற்ற தைப் பொங்கல் விழா
உழவர் திருநாளான தைப் பொங்கல் விழா அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
அம்பாறை,மட்டக்களப்பு பிராந்திய லயன்ஸ் கழகங்களும் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பொங்கல் விழா காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகளுடன் இடம் பெற்றன.
காரைதீவு முச்சந்தியில் அமைந்துள்ள விபுலானந்த அடிகளார் சதுக்கத்திலிருந்து ஆரம்பமான பொங்கல் விழா ஊர்வலத்தில் உழவர்களை கௌரவப் படுத்தும் வகையில் அவர்களால் பயன் படுத்தப்படும் விவசாய உபகரணங்களுடன் பெருந் திரளான இந்துக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் லயன்ஸ் கழக ஆளுனர் உட்பட கழகங்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
விபுலானந்த சதுக்கத்தில் இருந்து ஆரம்பமான பொங்கல் விழா ஊர்வலம் ஆலயத்தை சென்றடைந்து நந்திக் கொடி ஏற்றலுடன் கலாச்சார விழுமியங்களுடன் ஆலய முன்றலில் பொங்கல் விழா இடம் பெற்றன.
இவ்விழாவில் காரைதீவு மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்
Comments
Post a Comment