Posts

கல்முனை பொலிஸ் சவால் கிண்ணம்; பிரேவ் லீடர் அணி சம்பியன்

Image
கல்முனை பொலிஸ் சவால் கிண்ணத்தை சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்தது. கல்முனை பொலிஸ் நிலையம் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் அனுசரணையில் இளைஞர்களுக்கு போதைப் பொருளற்ற சமுதாயம் தொடர்பில் விழிப்புட்டும் வகையில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு. ஏ.கப்பாரின் வழிகாட்டுதலில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கல்முனை டொல் பின் விளையாட்டுக் கழகத்தை சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 51 ஓட்டங்களினால் வெற்றிபெற்று 2015 ஆம் ஆண்டுக்கான பொலிஸ் கிண்ண த்தை சுவீகரித்துக் கொண்டது. கல்முனை பொலிஸ் எல்லைக்குட்டபட்ட 13 கழகங்கள் பங்கு கொண்ட மேற்படி 8 ஓவர்கள் கொண்ட மட்டுப் படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக் கிழமை (24) கிழக்கு பிராந்திய பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைத்தார். இறுதிப் போட்டி 10 ஓவர்கள் கொண்டதாக அமைந்தது. இறுதிப் போட்டிக்கு அம்பாறை தற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.என்.வாகிஸ்ட பிர...

கல்முனையில் மே தினக்கூட்டம் கிழக்கு சுகாதார அமைச்சர் பிரதம அதிதி

Image
அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்­கத்தின் மே தினக் கூட்டம் எதிர்­வரும் முதலாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கல்­முனை மாந­கரில் நடை­பெ­ற­வுள்­ளது. அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்கம் தமது இணை நிறு­வ­னங்­க­ளான வட­கி­ழக்கு மாகாண ஜீவோ­தய நலன்­புரி நிறு­வனம், வட­கி­ழக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜன­நா­ய­கக்­கட்சி, ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்­சங்க சம்­மே­ளனம் என்­ப­வற்­றுடன் இணைந்து இந்த மே தினக் கூட்­டத்தை வெகு சிறப்­பாக நடத்­த­வி­ருக்­கின்­றது. சங்­கத்தினால் 21ஆவது வரு­ட­மாக நடத்­தப்­படும் இந்த மே தினக் கூட்டம் பொது ஊழியர் சங்­கத்­த­லை­வரும் தொழிற்­சங்­க­வா­தி­யு­மான எஸ். லோக­நாதன் தலை­மையில் நடை­பெறும். கல்­முனை வை.எம்.சீ.ஏ. மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வி­ருக்கும் இந்த மே தினக் கூட்­டத்தில் கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் பிர­தம அதி­தி­யா­கவும் கிழக்கு மாகாண சபையின் தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பினர் பேரா­சி­ரியர் எம். இரா­ஜேஸ்­வரன் கெள­ரவ அதி­தி­யா­கவும் கலந்து கொள்வர். அத்­துடன் பிர­பல இலக்­கியப் புர­வ­லரும் ச...

காத்தன்குடி மீடியா போரத் தலைவர் டீன் பைரூஸ் நன்றி தெரிவிப்பு

Image
எம்.ஐ.அப்துல் நஸார் கடந்த 2015.04.25ஆந் திகதி நடைபெற்ற காத்தன்குடி மீடியா போரத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடப்பாண்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் A.L.டீன் பைரூஸ் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் காத்தன்குடி மீடியா போரத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகவும்,முகநுால் மூலமும், குறுஞ் செய்திகள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.  எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு அமானிதமாகும். அதனை மிகப் பொறுப்புடன் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளேன். எமது காத்தான்குடி மீடியா போரத்தின் பணிகளை சிறப்பாகவும் பக்கச்சார்பின்றியும் புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு மீடியா போரத்தின் உறுப்பினர்களும் மற்றும் அனைத்து ஊடக சொந்தங்களும் உறுதுணையாக  இருப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டதோடு கருத்து வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் இணைத்துக்கொண்டு புதிய உத்வேகத்துடன் காத்தான்குடி மீடியா போரத்தை வழி நடாத்த உறுதி பூண்டுள்ளதாகவும்...

மூத்த கல்விமான் எஸ்.எச் .எம்.ஜெமீலின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும்

Image
கல்முனை மண்ணை வான்புகழ் எய்தச்செய்த மூத்த கல்விமான் எஸ்.எச் .எம்.ஜெமீலின் மறைவு  முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார் . எஸ்.எச்.எம்.ஜெமீலின் மறைவையிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .. தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில் , சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்விமான் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் கல்முனை ஸாஹிராவின் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதயில் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்  அத்தோடு கல்லூரியின் தேசிய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவராவார் . கல்முனை பாத்திமாக் கல்லூரி , கொழும்பு சாஹிராக் கல்லூரி  ஆகியவற்றின் பழைய மாணவராவார் ஆங்கில மொழி மூலம் கல்விகற்ற எஸ்.எச்.எம். ஜெமீல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்றார்  பின்னர்  கொழும்பு பல்கலைககழகத்தில் முதுமானிப்பட்டம் பெற்றார் இலங்...

கல்முனையில் 12 கடைகள் தீ பற்றி எரிந்தது மாநகர தீ அணைப்பு படையின் உசார் நிலை மந்தம்

Image
கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியில்இன்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 12  கடைகள் எரிந்து சாம்பலாகின  கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இன்று மாலை 4.00 மணியளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது.  கல்முனை மாநகர சபை அருகாமையில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு மாநகர சபை தீ அணைப்பு படையினர் விரைந்து உடன் செயற் பட்டிருந்தால்  இந்த அனர்த்தமும் தவிர்க்கப்  பட்டிருக்கும்  என வர்த்தகர்கள் தெரிவித்தனர் . கடைகள்  எரிந்த பிற்பாடே  அவ்விடத்துக்கு தீ அணைப்பு  படையினர் சென்றிருந்தனர். இதற்கான காரணம் மாநகர சபை தீ அணைப்பு பிரிவு  ஆரம்பிக்கப் பட்டும்    அவர்கள் உசார் நிலையில் இருக்காமையே. . அவர்கள் உசார் நிலையில் இல்லாததனால்தான்  தீப்பிடிக்கும் இடங்களுக்கு மாநகர ஆணையாளரும் செல்லவேண்டியுள்ளது. கிழக்கில் வர்த்தக கேந்திர நிலையமாக விளங்கும் கல்முனை நகர சந்தைக் கட்டிடத் தொகுதியில் சுமார் 500 பெரிய கடைகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறிய கடைகளும் இயங்கி வருகின்றன.. பகல் வேளை...

நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக அம்பாரை மாவட்ட சர்வ சமயக்குழுவின் விஷேட கூட்டம்

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் அம்பாரை மாவட்ட சர்வ சமயக்குழுவின் விஷேட கூட்டமொன்று இன்று அட்டாளைச்சேனையில் நடை பெற்றது. த்ரூ விஷன் அமைப்பின் அலுவலகத்தில் சர்வ சமயக்குழுவின்சிரேஷ்ட உறுப்பினர்  போதகர் தேவகுமார் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாம் இந்து கிருஸ்தவ மற்றும் பௌத்த சமயங்களைப் பிரதிநிதித்துவப்படு த்தி  சர்வ சமயத் தலைவர்கள் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

கல்முனை சிவசக்தி வித்தியாலய கூரையின் உள்ளே இருந்து துப்பாக்கி கண்டெடுப்பு!

Image
கல்முனை நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலய கூரை உள்ளே இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூரை திருத்த வேலைகள் செய்த வேளையிலேயே இன்று துருப்பிடித்த நிலையில் துப்பாக்கியும், ரவைகளும் இருந்ததைக் கண்ட வேலையாட்கள் பாடசாலை நிருவாகத்தினுாடாக கல்முனை பொலிஸாருக்கு தொியப்படுத்தினா். கல்முனை பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக A .H .H .M .நபார் நியமனம்

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் விவசாய அமைச்சின் இணைப்பாளரும்,ஐக்கிய தேசியக் கட்சியின்  அம்பாறை மாவட்ட இளைஞர்  அமைப்பாளருமான  நற்பிட்டிமுனை A .H .H .M .நபார்  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக நெடுஞ் சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினால் நியமிக்கப் பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நெடுஞ் சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் வைத்து சமீபத்தில்  அமைச்சர் கபீர் ஹாசிமால் வழங்கி வைக்கப் பட்டது.

கலாபூஷணம் விருது 2015 க்கான விண்ணப்பங்கள் கோரல்!

Image
தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களுக்கு கலாபூஷணம் விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கலாசார அலுவல்கள் திணைக்களம் கோரியுள்ளது. இதன்படி தமிழ் கலைஞர்களை தெரிவு செய்யும் பொறுப்பு இந்து சமய கலாசார திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.  சிற்பம், ஓவியம், வாய்ப்பாட்டு, நடனம், தவில், நாதஸ்வரம், நாடகம், சினிமா, நாட்டுப்புறவியல், இலக்கியம், நாட்டுக்கூத்து, ஊடகத்துறை, போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்புறச் சேவையாற்றியவர்கள் கலாபூஷண விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் இவ்விருது பெற தகுதியுடையவர்களாவார். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முன்னுரிமை அடிப்படையில் கலைஞர்களைத் தெரிவு செய்து ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்ப படிவங்களும் அந்தந்தத் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ் விண்ணப்ப படிவங்களை www.hindudept.gov.lk  என்ற திணைக்களத்தின் இணையத்தள முகவரியிலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

“மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்” நூல் வெளியீடும் மருதமுனை மண்ணுக்கு மணம் சேர்த்தோர் கௌரவிப்பும் மருதமுனை மசூர்மௌலானா மைதானத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது

Image

பாண்டிருப்பு ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழா ஆரம்பமானது .

Image
மகா பாரத  இதிகாச நாயக்கர்களான பஞ்ச பாண்டவர்களின் வராலாறு கூறும்  கிழக்கு மாகாணத்தின் கல்முனை பாண்டிருப்பு  பதியில்  கோயில் குடி கொண்டிருக்கும் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய  வருடாந்த  மகோற்சவ  பெரு  விழா  வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . பத்து  நாட்களாக நடை பெறும்  கிரியைகளை தொடர்ந்து பத்தாம் நாளான 04.05.2015 ஞாயிற்றுக்  கிழமை  தீர்தோற்சவ துடன் மகோற்சவ  பெரு  விழா நிறைவு பெறும் .   கிரியை காலத்தில்  பூசை வழிபாடுகள் இடம் பெறுவதுடன் மகா சங்காபிசேகம் ,வசந்த மண்டப பூசை ,வேட்டை திரு விழா ,முத்துச் சப்பர பவனி  என்பனவும் இடம் பெறவுள்ளதாக  ஸ்ரீ சித்தி விநாயகர் ,ஸ்ரீ அரசடி அம்பாள் ஸ்ரீ வாடா பத்திர காளி  அம்பாள்  ஆலயங்களின் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.  ஆலய பிரதம குரு,  குரு  திலகம்  ஈசான சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ  வ.கு.சிவானந்தம்  தலைமையில்  மகோற்சவ வழிபாடுகள் கொடியேற்றத்துடன்  ஆரம...

"போதையற்ற சமூகம்"கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு

Image
அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவணையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நேற்று  (24) வெள்ளிக்கிழமை கேலாகலமான இடம்பெற்றது. கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹாகெதர, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், சாய்ந்தமருது அஸ்லம் பிக்மாட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.அஸ்லம் றியாஜ் உள்ளிட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.   சாய்ந்தமருத...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் எனது மகள் விடுதலை செய்யப்படவில்லை

Image
உதயஸ்ரீயின் தாய் கவலை ஜனாதிபதி எனது மகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியும் இது வரை எனது மகள் உதயஸ்ரீ விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக் கின்றது என சீகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயஸ்ரீயின் தாய் எஸ். தவமணி தெரிவித்தார். சீகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயஸ்ரீயை அவரது தாய் எஸ். தவமணி வியாழக்கிழமை (23) சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்.ஜனாதிபதி எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறியும் இது வரை எனது மகள் உதயசிறி விடுதலை பற்றி எதுவும் அறிவிக் கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்ததாக தாய் தவமணி மேலும் தெரிவித்தார். மகளை பார்ப்பதற்காக வியாழக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற போது நான் மகளுக்காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொருளையும் உள்ளே கொண்டு செல...

அம்பாறை மாவட்டபுதிய அரசாங்க அதிபருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

Image
அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. துசித பீ வணிகசிங்க, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சு அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) சந்தித்தார். இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு அமைச்சர் ஹக்கீம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் உடனிருந்தனர்.

கலசம் இணைய தளத்தின் பணிப்பாளர் அப்துல் பாஸித் அவர்களின் தந்தை வபாத்தானார்

Image
கலசம் இணையதள ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துல் பாசித் அவர்களின் தந்தை பளீல்  ஹாஜியார் (மரைக்காயர்) நேற்று நள்ளிரவு காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா இன்று காலை 8 மணிக்கு மாளிகைகாடு அந்நூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பட்டது . அன்னாரின் மறைவுக்கு எமது கல்முனை நியூஸ்  இணையத்தள நிர்வாகம்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

நற்பிட்டிமுனை அல் -அக்ஸாவில் 42 வீதமானோர் தமிழ் பாடத்தில் சித்தியடையவில்லை

Image
கடந்த 2014 ஆம் ஆண்டு  நடை பெற்ற கல்விப் பொதுத் தராதர  சாதாரண பரீட்சையில் கல்முனை வலயக் கல்வி அலுவலகதுகுட்பட்ட நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் 42 வீதமான மாணவர்கள் தமிழ் பாடத்தில் சித்தியடையவில்லை என தெரிய வருகின்றது . நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு 50 மாணவர்கள்  கல்விப் பொதுத் தராதர  சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். . இதில் 21 மாணவர்கள் தமிழ் பாடத்தில் சித்தியடையவில்லை .அதே போன்று 46 மாணவர்கள் ஆங்கில பாடத்திலும் ,18 மாணவர்கள் கணித பாடத்திலும் 22 மாணவர்கள் விஞ்ஞான பாடத்திலும் ,11 மாணவர்கள் வரலாறு பாடத்திலும் சித்தியடைய வில்லையென  கல்முனை  வலயக் கல்வி அலுவலகத்தினால் வெளியிடப் பட்டுள்ள  பரீட்சை ஒப்பீட்டறிக்கையில்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரை -நேரடி ஒளிபரப்பு

Image

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிற்சந்தையும் கல்வி கண்காட்சியும்!

Image
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு நடத்தும் தொழிற் சந்தையும் கல்விக் கண்காட்சியும் 2015 ஆம் ஆண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இத் தொழிற்சந்தையில் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்களது சுய விபரக் கோவையுடன் இத் தொழிற்சந்தையில் கலந்து கொள்ளுமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு பட்டதாரிகளை அழைக்கிறது.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை மிக விரைவில்; அமைச்சர் கரு உறுதி!

Image
சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென‌ புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச ்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று(22) புதன்கிழமை பிற்பகல் தம்மைச் சந்தித்த பிரதிநிதிகள் குழுவினரிடம் உறுதியளித்தார்.  9 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும், 17 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கான நியாயங்களை அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் கரு ஜயசூரியவிடம் விளக்கிக் கூறினார். இச்சந்திப்பில் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி, கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத், பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம்,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பிர்தௌஸ், பஷீர், நிசார்தீன், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன குழுத் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பள்ளவாசல் பரிபாலன சபை உற...

“மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்” நூல் வெளியீடும் மருதமுனை மண்ணுக்கு மணம் சேர்த்தோர் கௌரவிப்பும்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தருமான அல்-ஹாஜ் ஏ.ஆர்.ஏ.சத்தார் தொகுத்துள்ள “மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்” நூல் வெளியீடும் மருதமுனை மண்ணுக்கு மணம் சேர்த்தோர் கௌரவிப்புவிழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (25-04-2015)பி.ப.4.30 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது. திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த முப்பெரும் விழாவில் மருதமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்த பல்துறை சார்ந்த 160 பேர் வாழ்நாள் சாதனையாளர்களாக பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப் படவுள்ளனர். இதில் பிரதமஅதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டு நூலை வெளியீட்டு வைப்பதுடன் சாதனையாளர்களையும் கௌரவிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்,சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹ...

ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு – ஹக்கீம், றிசாத் கல்வியமைச்சரிடம் நேரடியாக முறையீடு

Image
நேற்று கல்வியமைச்சில் அமைச்சர் றவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் இணைந்து மலையக மற்றும தென் பிரதேசத்தில் 11 மாவட்ட தமிழ் மொழி மூல பாடாசாலைகளில்  முஸ்லீம் ஆசிரியர்கள் நியமன விடயத்தில் ஒன்று பட்டு தமது கோரிக்கை வென்றெடுத்தார்கள். இது போன்று ஏனைய விடயங்களிலும் மற்றைய அமைச்சர்களான ஹலீம், கபீர் காசீம் ;ஆகியேர்களையும் இணைத்துக் கொண்டு  ஒன்றுபட்டால் இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்களது பல விடயங்களில் இந் அரசில் வெற்றி காணலாம்.  என முஸ்லீம் புத்திஜீவிகள் தெரிவிப்பு. மலையக மற்றும் தென் பிரதேசத்தைச் சேர்ந்த 11 மாவட்டங்களது தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் நியமனம் செய்வதற்காக கடந்த ஆண்டு முன்னைய ஆட்சியாளர்களினால் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.  இதில் சுமார் 700 தமிழ் மொழி மூல இந்து, கிரிஸ்த்துவ பாடாசலைகளில் உள்வாங்கப்பட்டிருந்தன. ஆனால்  இம் மாவட்டங்களில் இருக்கின்ற அதே தமிழ் மொழி மூல முஸ்லீம் பாடசாலைகள் எதுவும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பாக  கண்டி மவாட்டத்தைப் பிரதிநிதிப்படுத்துகின்ற முஸ்லீம் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்று...

கைதுசெய்யப்பட்டார் பஸில் ராஜபக்‌ஷ!

Image
அமெரிக்காவிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்‌ஷ நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவருடன் சேர்த்து பொருளாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக்க மற்றும் திவிநெகும திட்டத்தின் பணிப்பாளர் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை 11.00 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடுவல நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.