கலாபூஷணம் விருது 2015 க்கான விண்ணப்பங்கள் கோரல்!

தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களுக்கு கலாபூஷணம் விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கலாசார அலுவல்கள் திணைக்களம் கோரியுள்ளது.
இதன்படி தமிழ் கலைஞர்களை தெரிவு செய்யும் பொறுப்பு இந்து சமய கலாசார திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.  சிற்பம், ஓவியம், வாய்ப்பாட்டு, நடனம், தவில், நாதஸ்வரம், நாடகம், சினிமா, நாட்டுப்புறவியல், இலக்கியம், நாட்டுக்கூத்து, ஊடகத்துறை, போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்புறச் சேவையாற்றியவர்கள் கலாபூஷண விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் இவ்விருது பெற தகுதியுடையவர்களாவார். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முன்னுரிமை அடிப்படையில் கலைஞர்களைத் தெரிவு செய்து ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய விண்ணப்ப படிவங்களும் அந்தந்தத் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ் விண்ணப்ப படிவங்களைwww.hindudept.gov.lk என்ற திணைக்களத்தின் இணையத்தள முகவரியிலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்