ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் எனது மகள் விடுதலை செய்யப்படவில்லை
உதயஸ்ரீயின் தாய் கவலை
ஜனாதிபதி எனது மகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியும் இது வரை எனது மகள் உதயஸ்ரீ விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக் கின்றது என சீகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயஸ்ரீயின் தாய் எஸ். தவமணி தெரிவித்தார்.
சீகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயஸ்ரீயை அவரது தாய் எஸ். தவமணி வியாழக்கிழமை (23) சிறைச்சாலைக்குச்
சென்று பார்வையிட்டார்.ஜனாதிபதி எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறியும் இது வரை எனது மகள் உதயசிறி விடுதலை பற்றி எதுவும் அறிவிக் கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்ததாக தாய் தவமணி மேலும் தெரிவித்தார்.
மகளை பார்ப்பதற்காக வியாழக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற போது நான் மகளுக்காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொருளையும் உள்ளே கொண்டு செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சவர்க்காரத்தை மட்டும் கொண்டு செல்ல அனுமதித்தனர்.
தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் உதயசிறி தன்னிடம் மன்றாடியதாகவும் தாய் மேலும் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment