“மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்” நூல் வெளியீடும் மருதமுனை மண்ணுக்கு மணம் சேர்த்தோர் கௌரவிப்பும்


(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தருமான அல்-ஹாஜ் ஏ.ஆர்.ஏ.சத்தார் தொகுத்துள்ள “மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்” நூல் வெளியீடும் மருதமுனை மண்ணுக்கு மணம் சேர்த்தோர் கௌரவிப்புவிழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (25-04-2015)பி.ப.4.30 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது.
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த முப்பெரும் விழாவில் மருதமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்த பல்துறை சார்ந்த 160 பேர் வாழ்நாள் சாதனையாளர்களாக பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப் படவுள்ளனர்.
இதில் பிரதமஅதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டு நூலை வெளியீட்டு வைப்பதுடன் சாதனையாளர்களையும் கௌரவிக்கவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்,சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி, கிழக்குமாகாண முதலமைச்சர் இஸட்.ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம், முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர்  பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
மேலும் கௌரவ அதிதிகளாக கல்முனைமாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோருடன் விஷேட அழைப்பாளர்களாக கிழக்குமாகாணகல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம், தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்