பாண்டிருப்பு ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழா ஆரம்பமானது .
மகா பாரத இதிகாச நாயக்கர்களான பஞ்ச பாண்டவர்களின் வராலாறு கூறும் கிழக்கு மாகாணத்தின் கல்முனை பாண்டிருப்பு பதியில் கோயில் குடி கொண்டிருக்கும் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழா வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
பத்து நாட்களாக நடை பெறும் கிரியைகளை தொடர்ந்து பத்தாம் நாளான 04.05.2015 ஞாயிற்றுக் கிழமை தீர்தோற்சவ துடன் மகோற்சவ பெரு விழா நிறைவு பெறும் . கிரியை காலத்தில் பூசை வழிபாடுகள் இடம் பெறுவதுடன் மகா சங்காபிசேகம் ,வசந்த மண்டப பூசை ,வேட்டை திரு விழா ,முத்துச் சப்பர பவனி என்பனவும் இடம் பெறவுள்ளதாக ஸ்ரீ சித்தி விநாயகர் ,ஸ்ரீ அரசடி அம்பாள் ஸ்ரீ வாடா பத்திர காளி அம்பாள் ஆலயங்களின் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
ஆலய பிரதம குரு, குரு திலகம் ஈசான சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ வ.கு.சிவானந்தம் தலைமையில் மகோற்சவ வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைக்கப் பட்டன
Comments
Post a Comment