கைதுசெய்யப்பட்டார் பஸில் ராஜபக்ஷ!
அமெரிக்காவிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்த்து பொருளாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக்க மற்றும் திவிநெகும திட்டத்தின் பணிப்பாளர் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை 11.00 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடுவல நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment