சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை மிக விரைவில்; அமைச்சர் கரு உறுதி!
சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று(22) புதன்கிழமை பிற்பகல் தம்மைச் சந்தித்த பிரதிநிதிகள் குழுவினரிடம் உறுதியளித்தார்.
9 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும், 17 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கான நியாயங்களை
அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் கரு ஜயசூரியவிடம் விளக்கிக் கூறினார்.
இச்சந்திப்பில் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி, கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத், பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பிர்தௌஸ், பஷீர், நிசார்தீன், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன குழுத் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பள்ளவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஏ.சீ.யஹியாகான் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment