Posts

மீரியபெத்த மண்சரிவு; உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள்

Image
இன்று காலை கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட   மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 300ற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார கூறுகின்றார்.

கமீட் அமைப்பின் ஏற்பாட்டில் எகெட் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அணுமுறை மற்றும் உள்வாங்கல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு

Image
(சுரேஸ்) “சம வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதனூடான இலகுவில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களுக்கான நிலையான அபிவிருத்தியை நோக்கிய வறுமைக் குறைப்பு”  எனும் செயற்திட்டத்தின் பிரகாரம் ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்டர் நெசனல் நிறுவனங்களின் நிதியுதவியுடன் கமீட் அமைப்பு அமுல்ப்படுத்தும்  திட்டத்தின் கீழ் எகட் கரிதாஸ் அமைப்பின் சமூக ஊக்குவிப்பாளர்களுக்கான மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுக்காக சேவை புரிபவர்களையும் உள்வாங்கல் தொடர்பான ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு கிறீன் கார்டின் தங்குமிட ஒன்றுகூடல் மண்டபத்தில் கமீட் அமைப்பின் உள்வாங்கல் தொடர்பான திட்ட உத்தியோகத்தா எஸ்.சக்தி தலைமையில் இன்று (29) நடைபெற்றது. இப்பயிற்சியின் மட்டக்களப்பு எகட் கரிதாஸ் அமைப்பின் சார்பாக திட்ட உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள்,சமூக ஊக்குவிப்பாளர்கள் பலர்  கலந்து கொண்டுவலது குறைந்தோர்  என்றால் என்ன வலது குறைவின் வகைகள்,மொழியும் வலதுகுறைவும், தொடர்பாடல் மற்றும் உள்வாங்கல் போன்ற விடயங்கள் சம்மந்தமாகவும் அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறன...

இலங்கை முஸ்லிம்கள் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் யாத்திரிகையினை மேற்கொள்ள வேன்டும் ஜனாதிபதி தெரிவிப்பு

Image
(எம்.ரீ.எம்.பாரீஸ் ) ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நேற்று கிழக்கு மாகாணத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக திருகோணமலை மாவட்டத்திற்கு தனது உத்தியோபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருத்தார். திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஜனாதிபதி மாவட்டத்தின் பாடசாலைகளில் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு  கூடம் பலவற்றை திறந்து வைத்தார். கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோய தொழில்நுட்ப ஆய்வு  கூடத்தை திறந்து தேசத்தின் சிறார்களிடம் கையளிக்கும் வைபவத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தனது உரையின் போது குறிப்பிட்டார். இதற்காக அரசாங்கம் புதிய முறையொன்றினை அறிமுகப்படுத்தியயுள்ளது. இந்த முறையின் கீழ் வசதியற்றவர்களும்  ஹஜ் யாத்திரிகையினை மேற்கொள்ள முடியும் என அவர்  குறிப்பிட்டார்.  இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ் கடமையினை நிறைவேற்றிய முஸ்லிம்களாகவே மரணிக்க வேன்டும் என தமது உரையின் போது மேலும்  குறிப்பிட்டார்.

அல்-கிம்மா நிறுவன பணிப்பாளரினால் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

Image
 (எம்.ரீ .எம்.பாரீஸ் ) அல்- கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர்  அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியினால்  நேற்று   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. மேற்படி அல்-கிம்மா நிறுவனம் இன மத வேறுபாடின்றி, சமூக ஐக்கியத்தையும் நாட்டின் அபிவிருத்தியினையும் கருத்திற்கொண்டு, இலங்கையின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை செய்துவருகின்றது. அந்தவகையில்  அல் கிம்மா நிறுவனம் அமைந்துள்ள கல்குடாத் தொகுதியில் நீண்ட காலக் குறைபாடாக உள்ள குடி நீர்  இணைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தி  மக்களுக்கு சுத்தமான குழாய் நீர்  இணைப்பினைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. மேலும் கல்குடா பிரதேசத்தில் குடிநீரை பெறுவதற்கே இந்த மகஜர் கையளிக்கப் பட்டுள்ளது  திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்ட்டு வரும்  அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதற்காக நேற்று  (2014.10.28ம் திகதி) இன்று வருகைதந்திருந்த   ஜனாதிபதியவர்களை முதலமைச்சரின்  இல்லத்தில் வைத்து சந்தித்த போதே இம்ம...

மட்டக்களப்பு சுகாதாரவைத்திய அதிகாரிகள் காhpயாலயம் மற்றும் சிறுவா;களுக்கான சர்வதேச நிவாரண அவசர பிரிவு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வைத்திய முகாம்

Image
(சுரேஸ்) மட்டக்களப்பு சுகாதாரவைத்திய அதிகாரிகள் காரியாலயம் மற்றும் சிறுவா;களுக்கான சர்வதேச நிவாரண அவசரபிரிவு செரி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வைத்திய முகாம்  செரி  அமைப்பின் தேசிய இயக்குனா; சீ.அனிற்றா ரமேஸ் தலைமையில் இன்று வை.எம்.சீ.ஏபிரதானமண்டபத்தில் நடைபெற்றது. சா;வதேசசிறுவர் தினத்தை முன்னிட்டு  செரி  அமைப்பானது மேற்கொண்டுவரும் சிறுவா;களுக்கான போசாக்கு மற்றும் கல்விக்கான உதவி ஆகிய திட்டகளின் மட்டக்களப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்ன ஊறனி< நாவலடி >கொக்குவில்> நாவற்குடா> மஞ்சந்தொடுவா ஆகிய கிராமங்களின் குடும்ப நலஉத்தியோகத்தா;கள் உதவியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூன்று தொடக்கம் எட்டு வயது வரையுள்ள போசாக்கு நிறை குறைந்த நூற்றுக்கு அதிகமான குழந்தைகள் இவ்வைத்திய முகாமில் கலந்துகொண்டு பல் சுகாதாரவைத்தியம் மற்றும் போசாக்கு நிறை குறை பாட்டிற்கான தீர்வுகள் போன்ற விடயங்களை வைத்திய அதிகாரிகள் மூலம் பல ஆலோசனைகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வைத்திய முகாமில் சுகாதாரவைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் சார்ப...

இரு பசுமாடுகளின் தலைகள் உயிருடன் வெட்டப்பட்டுஅச்சுறுத்தல்

Image
சுரேஸ்  திருக்கோயில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வட்டமடு கிராம மேச்சல் தரை காணியில் இரண்டு பசுமாடுகள் தலைகள் வெட்டப்பட்டநிலையில் எங்கள் காணிகளுக்குள் கால்நடைகள் வெளியேற்றப்படவேண்டும் இல்லாவிட்டால் அதற்கு ஏற்பட்டநிலைதான் உங்களுக்கும் ஏற்படும் எனும் எச்சரிக்கை கருத்துதொறிக்கப்பட்ட  பதாதை எழுத்தில் காட்சிப் படுத்தப்பட்ட சம்பவம் நேற்று 28 இரவு நடைபெற்றதாக திருக்கோயில் பொலிசார்  தெரிவித்தனர்  அந்த வகையில் திருக்கோயில் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டமடு மேச்சல் தரைபகுதியில் விவசாயிகள் அத்து மீறி விவசாயசெய்கையில் ஈடுபடுகின்ற சம்பவம் குறித்துவிவசாயிகளுக்கும் கால் நடைஉரிமையாளர்களுக்குமிடையில் முரண்பாடுகளும் போராட்டங்களும் கடந்தகிழமைகளில் நடை பெற்றதையடுத்து திருக்கோயில் பொலிசாரினால் இரு தரப்பிலும்  பொத்துவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவழக்கின் போது இருதரப்பாலும் குறித்த இடத்திற்கு செல்லதடைவிதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வட்டமடு மேச்சல் தரைபிரதேச இரு மாட்டுப்பட்டியில் இருந்த இரு மாடுகளை உயிருடன் தலைகள் வெட்டப்பட்ட நிலையில் நாவலடிசந்தியில...

பெரிய நீலாவணை கடற் கரையில் ஆண் சடலம்

Image
கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  பெரிய நீலாவணை  கடற் கரையில்  இன்று காலை  ஆண்  சடலம்  ஒன்று  கண்டெடுக்கப் பட்டுள்ளது .சடலமாக இனங்காணப் பட்டவர் 59 வயதுடைய பாண்டிருப்பை  சேர்ந்த  ஒரு பிள்ளையின் தந்தையான சின்னதுரை துரை  ராசா  என்பவராகும் . சடலமாக  கிடந்த  கடற்கரை  மணல் பகுதியில் அருகில் கிருமி நாசினி  நஞ்சு  போத்தல் ஒன்றும் காணப் படுகின்றன .  கல்முனை நீதி மன்ற கட்டளைக்கு அமைய கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு சடலம் எடுத்து செல்லப் பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் ஆட்டைகடித்து ,மாட்டைக்கடித்து , மனிதனையும் கடித்து நெருப்புடன் விளையாட முற்படுகிறார் என ஹரீஸ் MP கொதிப்பு

Image
(ஹாசிப் யாஸீன்)   கல்முனை சாஹிபு வீதியின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  ஜீ.பிரேமசிறி மகநெகும நிறுவனத்தின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இவ்வீதியின் அபிவிருத்திப் பணி தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் மூக்கை நுளைப்பது கவலையளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஊடகப் பிரிவு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதானது, பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்த வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் 4 கோடியே 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சாஹிபு வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தபோதிலும் இடைநடுவில்இ ஒப்பந்தக்காரர்  மதிப்பீட்டு அறிக்கையின் விலைகளில் மாற்றங்களை செய்யப்பட வேண்டும் எனக்கோரி இவ்வேலைகளை சில காலம் நிறுத்தியிருந்தார் . இவ்வீதியின் பணிகள்...

கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட கரையோர மாவட்ட பிரேரணை தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய​க் கூட்டமைப்பி​ன் உறுப்பினர்க​ள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Image
கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட கரையோர மாவட்ட பிரேரணை தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய​க் கூட்டமைப்பி​ன் உறுப்பினர்க​ள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். கல்முனை மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட கரையோர மாவட்டம் அமைப்பது சம்மந்தமான பிரேரணை தொடர்பில் கல்முனை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் நோக்கில் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பாண்டிருப்பில் இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் ஜெயக்குமார், கமலதாசன், விஜயரெட்னம் ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இங்கு கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன், தமிழ் பேசும் மக்களின் நிலையான தீர்வு என்ற விடயத்தில் எமது தலைமை அன்றிருந்து இன்று வரைக்கும் மிகவும் உறுதியாக இருந்து வருகின்றது என்பதனை தமிழ்த் தேசியத் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கூடி பேசும் இடங்களிலெல்லாம் வலியுறுத்திக் கொண்டே வருகின்றார்கள் என்ற கருத்...

மாற்றாந்தாய் குழந்தைக்கும் பெயர் சூட்ட ஆசைப்படும் அரசியல்

Image
(அகமட் எஸ். முகைடீன்) ஒரு சந்ததியிலிருந்து இன்னுமொரு சந்ததிக்கு கடத்தப்படுகின்ற அடையாளப் பதிவுகளாக காணப்படுகின்ற அம்சங்களை வரலாற்றுத் தடையங்களை அழிக்கின்ற ஒரு அம்சமாகவே சாய்ந்தமரு வைத்தியசாலை வீதியின் பெயர் மாற்ற செயற்படு அமைவதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு சமூகத்தின் பழமை, நாகரீகம், வாழ்வியல் மற்றும் இன்னோரன்ன விடயங்களின் தடையங்களை பேணிப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கான வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பிரதேச வாழ் மக்கள்  மேற்கொள்ள வேண்டும். இது ஒரு இன்றியமையாத மிக முக்கியமான ஒரு செயற்பாடாக  காணப்படுகின்றது. இது இவ்வாறு இருக்கும்போது மக்களின் ஆணை பெறாத மக்களின் பிரதிநிதிகள் வரலாற்றுத் தடையங்களை அழிக்க முனைவதற்கு ஒரு போதும் இடமளிகக் கூடாது. சாய்ந்தமருது வைத்தியசாலை  வீதியின் பெயர்  மாற்றத்திற்கான தனி நபர் பிரேரனை ஒன்று சகோதரர் மஜீட் அவர்களினால் மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைவாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது....

40வது தேசிய விளையாட்டு விழாவில் நிந்தவூர் நிக்சி அஹமட் சிறந்த வீரராக தெரிவு

Image
அனுராதபுரத்தில் நடைபெற்றுவரும் இலங்கையின் 40வது தேசிய விளையாட்டுப்போட்டியின் மென்பந்து (Soft Ball) கிரிக்கெட்துறையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த வீரராக நிந்தவூரைச் சேர்ந்த நிக்சி அஹமட் விளையாட்டு அமைச்சினால் நேற்று  (27.10.2014) 10,000.00 ரூபா பணப்பரிசும், ஞாபகச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அனுராதபுர விளையாட்டுத்தினைக்களத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் மேற்படி போட்டிகளின் கிரிகெட் போட்டிகளுக்கான இறுதிநாள் நிகழ்வின் பரிசளிப்பிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார். 

நற்பிட்டிமுனை ஊடகவியலாளர் முஜாஹிதின் புதல்வி மரணம்

Image
நற்பிட்டிமுனையை  சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹிதின்  09 மாத வயதுடைய புதல்வி இன்று காலை மரணமானார் . நற்பிட்டிமுனை  பொது மையவாடியில்  இன்று காலை 9.30 மணிக்கு ஜனாஸா  நல்லடக்கம் செய்யப்பட்டது . ஊடகவியலாளர்கள் உட்பட  பலர் ஜனாஸாவில் கலந்து கொண்டனர் .

லண்டனில் இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பின் பிரகடன மாநாடு! அஷ்ரப் நினைவு!! எம்.ஐ.எம். முகையதீனுக்கும் கௌரவம்!!!

Image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு

Image
(சுரேஸ்) மட்டக்களப்புமாவட்டசிவில் பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் ஸ்டா சொலீடார்டி அமைப்பின் நிதியுதவியில் மாவட்டத்தில்  உள்ள பிரபல பாடசாலைகளில்  இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ மாணவிகளுக்கான பரீட்சை வழிகாட்டல் தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர்  வ.கமலதாஸ் தலைமையில் இன்று (27) மட் /சிவானந்தா தேசியபாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில்  ஆசியூரையினை கலாநிதி.டி.திருச்செல்வம் கலந்து கொண்டு நிகழ்த்தியதுடன் பிரபல பாடசாலைகளான சிவானந்தா தேசியபாடசாலை ,தர்மரெட்ணம் வித்தியாலயம் ,விவேகானந்தா வித்தியாலயம்,விபுலானந்தா வித்தியாலயம்,புனித. தெரேசாமகளீர்  பாடசாலை ஆகியபாடசாலைகளின் மாணவ மாணவிகள் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு விஞ்ஞானம்,கணிதம்,ஆங்கிலம்,வரலாறு போன்ற பாடங்களின்ஆலோசனைகளை தேர்ச்சிவாய்ந்த ஆசிரியஆலோசகர்கள் மூலாக பெற்றுக் கொண்டமைகுறிப்பிடத்தக்கது. 

“மகிழ்சியானகுடும்பம்”எனும் தொனிப்பொருளானபயிற்சி

Image
(சுரேஸ்) மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏஅமைப்பின் ஏற்பாட்டில் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் பங்களிப்புடன் செயற்திட்டம் நடை முறைப்படுத்தும் கிராமங்களில் உள்ளகு டும்பங்களில் நல்ல புரிந்துணர்வுடன் ஏற்படக்கூடிய ஆரோக்கியமான நோக்குடன் வாழும் “மகிழ்ச்சியானகுடும்பம்”எனும் தொனிப் பொருளிலாக பயிற்சிநிகழ்வு  இன்று வை.எம்.சீ.ஏஅமைப்பின் ஒன்றுகூடல் மண்டபத்தில்நடைபெற்றது. இப்பயிற்சியின்சேவ் த சில்ரன் நிறுவனத்தின் மாவட்டகிளை உத்தியேகத்தர்  மார்க், பால் நிலை தொடர்பான ஆலோசகர்  பொ. புவனேஸ்வரி மற்றும் வை.எம்.சீ.ஏஅமைப்பின் வெளிக்களஉத்தியோகத்தர்கள் சமூக வலுவூட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனா;. அத்துடன் இப்பயிற்சி நெறியின் இலகுபடுத்துனராக கெயார்  இன்டர் நெசனல் அமைப்பின் ரவீச்சந்திரன் சௌமினி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  வருடாந்த பொதுக் கூட்டம்  எதிர் வரும் 2014.11.01 சனிக்கிழமை  கல்முனை அல் -பஹ்ரியா மகா வித்தியாலயத்தில்  முற்பகல் 10.00 மணிக்கு நடை பெறவுள்ளது . சம்மேளனத்தின் தலைவர்  கலா பூசணம்  மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடை பெறவுள்ள  வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய நிருவாகிகள் தெரிவும் ,தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டு  பகற்  போசனத்துடன்  அங்கதவர்களுக்கான  பரிசளிப்புடனும் ,கெளரவிப்புக்களுடனும்  கூட்டம் நிறைவு பெறும் என சம்மேளனத்தின்  செயலாளர்  ஐ.எல்.எம்.ரிஸான்  தெரிவித்துள்ளார் 

மத்திய முகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தில் முப்பெரு விழா

Image
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மத்திய முகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினா் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள பாடசாலை சுற்று மதிலுக்கான அடிக்கல் நடல், ஆசிரியர் தின கௌரவிப்பு விழா, சாதனையாளர்கள் கௌரவிப்பு போன்ற முப்பெரும் விழா இன்று (27) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  அதிபர் எஸ்.எம்.எம்.யூசூப் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்த கொண்டார்.  கௌரவ அதிதிகளாக மைஹோப் மற்றும் ஐவா தாதியர் கல்லூரி என்பவற்றின் அதிபர் லயன் சித்தீக் நதீர் எம்.ஜே.எப், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் செயலாளர் சீ.எம்.முனாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளர் வை.ஹபிபுல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பீட உறுப்பினர் ஏ.சீ.ஏ.நிசார், பாராளுமன்ற உறுப்பினரின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் ஏ.எம்.மஹ்றூப் உட்பட பல பிரமுகர்கள் கலந்த கொண்டனர்.  இந...