மாற்றாந்தாய் குழந்தைக்கும் பெயர் சூட்ட ஆசைப்படும் அரசியல்

(அகமட் எஸ். முகைடீன்)

ஒரு சந்ததியிலிருந்து இன்னுமொரு சந்ததிக்கு கடத்தப்படுகின்ற அடையாளப் பதிவுகளாக காணப்படுகின்ற அம்சங்களை வரலாற்றுத் தடையங்களை அழிக்கின்ற ஒரு அம்சமாகவே சாய்ந்தமரு வைத்தியசாலை வீதியின் பெயர் மாற்ற செயற்படு அமைவதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு சமூகத்தின் பழமை, நாகரீகம், வாழ்வியல் மற்றும் இன்னோரன்ன விடயங்களின் தடையங்களை பேணிப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கான வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பிரதேச வாழ் மக்கள்  மேற்கொள்ள வேண்டும். இது ஒரு இன்றியமையாத மிக முக்கியமான ஒரு செயற்பாடாக  காணப்படுகின்றது. இது இவ்வாறு இருக்கும்போது மக்களின் ஆணை பெறாத மக்களின் பிரதிநிதிகள் வரலாற்றுத் தடையங்களை அழிக்க முனைவதற்கு ஒரு போதும் இடமளிகக் கூடாது.

சாய்ந்தமருது வைத்தியசாலை  வீதியின் பெயர்  மாற்றத்திற்கான தனி நபர் பிரேரனை ஒன்று சகோதரர் மஜீட் அவர்களினால் மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைவாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
  
சாய்ந்தமரு வைத்தியசாலை பன்னெடுங்காலமாக சுனாமிக்கு முன்னர் அமைந்திருந்த அமைவிடத்தை பறைசாற்றுகின்ற பெயராக சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி காணப்படுகின்றது. குறித்த வீதியின் பெயர் மாற்றத்தின் மூலம் வரலாற்றுப் பதிவுகளை அழிப்பதற்கு ஒருபோதும் துணை போகக்கூடாது.

நான் முதல்வராக இருந்த காலப்பகுதியில் இவ்வாறான  பிரேரனைகள் தீர்மானங்கள் சரியான முறையில் அணுகப்பட்டது. மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் மாநகர பிரதேசத்தில் காணப்படுகின்ற வீதியின் பெயர் மாற்றத்தை செய்வதானால் சபையில் தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டு, அத்தீர்மானம் பொதுமக்களை சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தப்படு, 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, குறித்த தீர்மாணத்திற்கு பொது மக்களின் ஆட்சேபனை ஏதும் இல்லாத பட்சத்தில், மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சருக்கு தெரியப்படுத்தி அவரின் அனுமதியினை பெற்ற பின்னரே பெயர் மாற்றத்தை செய்ய முடியும். எனவே குறித்த பெயர்  மாற்றத்திற்கு பொது மக்களின் ஆட்சேபனை இருப்பதனால் மேற்படி பெயர்மாற்றத்தினை மாநகர சபையினால் முன்னெடுக்க முடியாது.

கல்முனை மாநகர சபையின் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட தினம் தொட்டு சாய்ந்தமருது வாழ் மக்கள் என்னை  தொலைபேசியில் அழைத்து முறைப்பட்ட வண்ணம் உள்ளனர். குறித்த வீதியில் வசிக்கின்றவர்கள் உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச வாழ் மக்கள் குறித்த பெயர் மாற்றத்திற்கு எதிராக கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை பதிவுத்தபால் மூலம் எனக்கும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அவர்களுக்கு அனுப்புவைத்துள்ளதாக தெரிவித்தனர். அக்கடிதத்தினை மாநகர முதல்வருக்கும் அனுப்பிவைக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டேன். அந்தவகையில் குறித்த பெயர் மாற்றத்தினை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை  நான் முன்னெடுக்கவுள்ளேன்.

மாற்றான் குழந்தைக்கும் தான் பெயர்வைக்க துடிக்கும் இவர்கள், பெயர் மாற்றத் துடிப்பது அதிசயமன்று. நல்லது செய்யாவிட்டாலும் பறவாயில்லை, தீயது செய்யமால் இருப்பது மேலாகும். எனவே தான்தோன்றித் தனமாக, சுயவிருப்பில் பொது முடிவுகளை எடுப்பதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற தீர்மானங்களை சபைக்கு முன்வைப்பதற்கு முன்னதாக ஊர் பெரியவர்கள், பெரிய பள்ளிவாசல் பிரதிநிதிகள், புத்திசாலிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்மானங்களை முன்வைத்தால் இவ்வாறான பயனற்ற விடயங்களுக்காக சபையின் நேரத்தையும், காலத்தையும் வீனடிக்கத் தேவையில்லை. அது மாத்திரமல்லாது தான் சார்ந்த கட்சியின் பிரதிநிதிகள் கொண்டுவருகின்ற  பிரேரனைகளை மக்கள் நலன் கருதி ஆராயாமல், அமாச் சாமிகளாக ஆதரிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்