அல்-கிம்மா நிறுவன பணிப்பாளரினால் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
(எம்.ரீ .எம்.பாரீஸ் )
அல்- கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியினால் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
மேற்படி அல்-கிம்மா நிறுவனம் இன மத வேறுபாடின்றி, சமூக ஐக்கியத்தையும் நாட்டின் அபிவிருத்தியினையும் கருத்திற்கொண்டு, இலங்கையின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை செய்துவருகின்றது.
அந்தவகையில் அல் கிம்மா நிறுவனம் அமைந்துள்ள கல்குடாத் தொகுதியில் நீண்ட காலக் குறைபாடாக உள்ள குடி நீர் இணைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு சுத்தமான குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. மேலும் கல்குடா பிரதேசத்தில் குடிநீரை பெறுவதற்கே இந்த மகஜர் கையளிக்கப் பட்டுள்ளது
திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்ட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதற்காக நேற்று (2014.10.28ம் திகதி) இன்று வருகைதந்திருந்த ஜனாதிபதியவர்களை முதலமைச்சரின் இல்லத்தில் வைத்து சந்தித்த போதே இம்மகஜர் கையளிக்கப்பட்டது.
Comments
Post a Comment