இரு பசுமாடுகளின் தலைகள் உயிருடன் வெட்டப்பட்டுஅச்சுறுத்தல்


சுரேஸ் 

திருக்கோயில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வட்டமடு கிராம மேச்சல் தரை காணியில் இரண்டு பசுமாடுகள் தலைகள் வெட்டப்பட்டநிலையில் எங்கள் காணிகளுக்குள் கால்நடைகள் வெளியேற்றப்படவேண்டும் இல்லாவிட்டால் அதற்கு ஏற்பட்டநிலைதான் உங்களுக்கும் ஏற்படும் எனும் எச்சரிக்கை கருத்துதொறிக்கப்பட்ட  பதாதை எழுத்தில் காட்சிப் படுத்தப்பட்ட சம்பவம் நேற்று 28 இரவு நடைபெற்றதாக திருக்கோயில் பொலிசார்  தெரிவித்தனர் 
அந்த வகையில் திருக்கோயில் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டமடு மேச்சல் தரைபகுதியில் விவசாயிகள் அத்து மீறி விவசாயசெய்கையில் ஈடுபடுகின்ற சம்பவம் குறித்துவிவசாயிகளுக்கும் கால் நடைஉரிமையாளர்களுக்குமிடையில் முரண்பாடுகளும் போராட்டங்களும் கடந்தகிழமைகளில் நடை பெற்றதையடுத்து திருக்கோயில் பொலிசாரினால் இரு தரப்பிலும்  பொத்துவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவழக்கின் போது இருதரப்பாலும் குறித்த இடத்திற்கு செல்லதடைவிதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வட்டமடு மேச்சல் தரைபிரதேச இரு மாட்டுப்பட்டியில் இருந்த இரு மாடுகளை உயிருடன் தலைகள் வெட்டப்பட்ட நிலையில் நாவலடிசந்தியில் இடப்பட்டிருந்தது. 
இன்று அப்பகுதிக்கு சென்ற விவசாயிகளே கண்டு பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து மேற்படிசம்பவம் குறித்துதிருக்கோயில் பொலிசார் மேலதிக விசாரணை நடாத்திவருகின்றனர் .


இதே வேளை பொத்துவில் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில், விவசாயிகளின் நியாயத்தையும், அவர்களிடமுள்ள ஆவணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், விவசாயிகளை தடுத்து சமாதானக் குலைவை ஏற்படுத்திய பண்ணையாளர்களை எச்சரித்ததோடு, அவர்களின் உடமைகளை விவசாய காணிகளிலிருந்து அப்புறப்படுத்தி விவசாயம் செய்ய இடமளிக்க நேற்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .நீதி மன்ற கட்டளைக்கு மாறாக விவசாயிகளை சிக்கலில் மாட்டுவதற்காக சதி மேற் கொள்ளப் பட்டிருப்பதாக விவசாயிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்