கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு


(சுரேஸ்)
மட்டக்களப்புமாவட்டசிவில் பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் ஸ்டா சொலீடார்டி அமைப்பின் நிதியுதவியில் மாவட்டத்தில்  உள்ள பிரபல பாடசாலைகளில்  இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ மாணவிகளுக்கான பரீட்சை வழிகாட்டல் தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர்  வ.கமலதாஸ் தலைமையில் இன்று (27) மட் /சிவானந்தா தேசியபாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில்  ஆசியூரையினை கலாநிதி.டி.திருச்செல்வம் கலந்து கொண்டு நிகழ்த்தியதுடன் பிரபல பாடசாலைகளான சிவானந்தா தேசியபாடசாலை ,தர்மரெட்ணம் வித்தியாலயம் ,விவேகானந்தா வித்தியாலயம்,விபுலானந்தா வித்தியாலயம்,புனித. தெரேசாமகளீர்  பாடசாலை ஆகியபாடசாலைகளின் மாணவ மாணவிகள் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு விஞ்ஞானம்,கணிதம்,ஆங்கிலம்,வரலாறு போன்ற பாடங்களின்ஆலோசனைகளை தேர்ச்சிவாய்ந்த ஆசிரியஆலோசகர்கள் மூலாக பெற்றுக் கொண்டமைகுறிப்பிடத்தக்கது. 



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்