Posts
கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்ட ஆலோசனைகள், வருமான அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல்
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடனும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசிய மன்றம் நடைமுறைப் படுத்திவரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் – 2013 தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் வருமான அதிகரிப்பு குறித்த விஷேட கலந்துரையாடல் தற்பொழுது (8.00pm) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் கௌரவ முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடை பெற்றது
சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

கல்முனைப் பிரதேச சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தினத்தையொட்டி கல்முனைக்குடி, மற்றும் மருதமுனை-நற்பிட்டிமுனை சமுர்த்தி வலையங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2012.10.12ம் திகதி நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்கத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை பிரதே செயலாளர் திரு:எம்.எம்.நௌபல், கௌரவ அதிதியாக சமுர்த்தி முகாமைத்தவப் பணிப்பாளர் திரு: ஏ.ஆர்.எம். சாலி, விசேட அதிதியாக சமுர்த்தி வலய முகாமையாளர் திருமதி: எஸ்.எஸ். பரீதா ஆகியோர் கலந்து கொண்டனர். இம் மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் கல்முனைக்குடி சமுர்தி வலயம் நற்பிட்டிமுனை-மருதமுனை சமுர்த்திவலயத்தை தோற்க்கடித்து சம்பியன் கிண்ணத்தைத் தட்டிச்சென்றது இப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய 31 சிறுவர் கழகங்களுக்குமான விளையாட்டு உபகரணங்களையும் பிரதேச செயலாளர் வழங்கிவைத்தார்.
27ஆம் திகதியே ஹஜ் பெருநாள்
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது. ஹிஜ்ரி 1433 புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை. இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதிய்யா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள்இ கொழும்பு பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் ஷரீயா கவுன்ஸில் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று நாட்காட்டிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
நற்பிட்டிமுனை பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று (30.09.2012) நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹமட் றியாஸ் தலைமையில் நடைபெற்றது. ஒலிம்பிக் தீபமேற்றி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் 25மீற்றர் ஓட்டம்,முயல் ஓட்டம், தவளை ஓட்டம், தாறா ஓட்டம், சமநிலை ஓட்டம், போத்தலில் தன்னீர் நிரப்புதல்,கரன்டியில் தேசிக்காய் ஏந்திய ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட போட்டிநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதியாக முன்னாள் அட்டாலைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நசீர், அதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார், பெற்றோர் மற்றும் பிரேதேசவாசிகள் கலந்து சிறப்பித்தனர்.
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இலங்கை
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மஹேலவை தவிர வேறு எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 42, திலகரத்ன தில்ஷான் 35, குமார் சங்கக்கார 18, ஜீவன் மென்டிஸ் 15, திஸர பெரேரா 11, ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 10 என ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அஜ்மால், அப்ரிதி, ஹபீஸ், உமர் குல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தினார்.
இன்று கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு!
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது. சபையின் செயலாளரினால் சபையில் ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபையில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தெரிவு கோரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முன்மொழிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து பிரதித் தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது. இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியது.
கல்முனை பிரதேச கலாசார விழா; 12 பிரமுகர்களுக்கு கௌரவம்!
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

கல்முனை பிரதேச செயலக கலாசார பேரவை ஏற்பாடு செய்திருந்த விஷேட கலாசார விழா இன்று சனிக்கிழமை காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலாசார உத்தியோகத்தர் திருமதி வ.பற்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ்விழாவில் ஊடகம், இலக்கியம், சமூக சேவை, விளையாட்டு, மருத்துவம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்த 12 பேர் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். *யூ.எம்.அதீக் சோலைக்கிளி (இலக்கியம்) *எம்.எம்.ஏ.காதர் (இலக்கியம்) *எம்.எச்.எம்.முஹைதீன் (சமூக சேவை) *ஏ.எல்.இப்ராஹீம் (மருத்துவம்) *எம்.ஐ.எம்.முஸ்தபா (விளையாட்டு) *எம்.பி.அபுல் ஹசன் (இலக்கியம்) *ஏ.எம்.பி.எம்.ஹுசைன் (சமூக சேவை) *பி.எம்.எம்.ஏ.காதர் (ஊடகம்) *ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா (இலக்கியம்) *யூ.எம்.இஸ்ஹாக் (ஊடகம்) *எஸ்.எல்.ஏ.அசீஸ் (ஊடகம்) *ஏ.எல்.ஏ.நாசர் (சமூக சேவை) ஆகியோரே பாராட்டி கௌரவிக்கப்பட்ட பிரமுகர்களாவர். இதன்போது ‘முனைமலர்’ எனும் சிறப்பு மலரும் வெள...
சுகாதார அமைச்சராக மன்சூர்; விவசாய அமைச்சராக நஸீர் அஹமட்; வீதி அமைச்சு மீண்டும் உதுமாலெப்பைக்கு!
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

கிழக்கு மாகாண அமைச்சர்களின் சத்தியப் பிரமான வைபவம் இன்று மதியம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம் எஸ் உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். எம் எஸ் உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். விமலவீர தஸ்ஸநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அதேவேளை முஸ்லிம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு பதவிகளுக்கு ஹாபிஸ் நஸீர் அஹமட், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஹாபிஸ் நஸீர் அஹமட்- விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சராகவும் எம்.ஐ.எம். மன்சூர் – சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதேவேளை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் நிதி திட்டமிடல் அமைச்சராக சத்த...
முஹம்மது நபியை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்துக்கு எதிராக கல்முனையில் ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
ஜனாதிபதியின் ஆலோசகராக சந்திரகாந்தன்
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
.jpg)
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்!
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் 30 ஆம் திகதிக்கு முன்
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார நேற்று தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்ட மூன்று மாகாணங்களிலும் தேர்தல் காரணமாக விடைத்தாள் திருத் தும் பணிகள் முழுமையாக நிறைவடைய வில்லை. அவ்வாறு முழுமையடையாத விடைத்தாள்கள் அடங்கிய பக்கற்றுக்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு வரவழைத்து திருத்தும் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். 30 ஆம் திகதிக்கு முன்னதாக பெறுபேறுகள் வெளியிட்டு வைக்கப்படு மெனவும் அவர் கூறினார். அத்துடன் நடந்து முடிந்த பரீட்சை வினாத்தாளோ அதன் ஒரு பகுதியோ அல்லது வினாக்களோ எந்தவொரு சந் தர்ப்பத்திலும் பரீட்சைக்கு முன்னர் வெளியாகவில்லையென்பது பொலிஸ் விசாரணைகளினூடாக உறுதியாகியிருப்பதாக வும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக் காட்டினார். முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்குரிய பிரதேசங்களில் சி.ஐ.டி. யினர் விரிவான விசாரணைகளை நடத்திய பின்னரே இத்தீர்மானத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் சி.ஐ.டி. பணிப்பாளர் ஆகியோர் கையொப்பம் இட்டு ஒன்பது பக்க அறிக்கையொன...
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் ஹர்தாலுக்கு அழைப்பு
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் நிந்தனை செய்யும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இன்று 18 அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் கடை அடைப்புச் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வாலிப அமைப்பினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய உணர்வுகள் நம்பிக்கைகள் கொச்சைப்படுத்தப்படும் போது முஸ்லிம்கள் கோழைகளாக இருக்கமாட்டார்கள். அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் இஸ்லாமிய குரோதப்போக்கை வன்மையாக கண்டிக்க என்னுமொரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அமீர் அலிக்கு வழங்காவிடின் அரசு பாரிய விளைவை எதிர்நோக்கும்:
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
சுபைர் முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர்நோக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்க கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்து வருகின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான எமது கட்சியானது அரசாங்கத்தின் கூட்டு கட்சியாக இருந்து வருவதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தல் உட்பட ஏனைய அனைத்து தேர்தல்களிலும் அரசாங்கத்தின் வெற்றிக்காகவும் அரசாங்கத்தின் ஸ்த்திர தன்மைக்காகவும் பாடுபட்டு அரசாங்கத்தை வலுவடைய செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது. கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரைக்கும் அகில இலங்ககை முஸ்லிம் காங்கி...
கல்முனையில் இஸ்லாமிய அடிப்படையில் ‘ஹிமாயா பீச் றிசோட்’ எனும் புதிய ஹோட்டல்
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

கல்முனை வாடிவீட்டு வீதியில் முழு இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த ‘ஹிமாயா பீச் றிசோட்’ எனும் பெயரிலான முதலாவது ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள புதிய உறுப்பினரும் கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லுரி நிர்வாக சபைத் தலைவருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார். அத்துடன் இந்நிகழ்வில் விசேட அதிதியாக கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் உட்பட ஊர்ப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். கல்முனைப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த குறையான இந்த ஹோட்டல் முற்றிலும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த உணவு வகைகள், இஸ்லாமிய சூழலுக்கு அமைவாக தங்குமிடம், அனாச்சாரங்கள் அற்ற விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை நடாத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த நிகழ்வுக்காண அழைப்பிதழில் போதைவஸ்து, மதுபாவனைகள் முற்றாக தடை செய்யப்பட்ட இடமாக இதனைக் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்முனை ஹிமாயா ட்ரவல்ஸ் உரிமையாளர் அல்-ஹாஜ் மௌலவி எம். நபார் அவர்களின் மற்றுமொரு சேவையே இந்த புதிய உதயமாகும்.
அம்பாறை பிரதேசத்தில் நாளை மின்வெட்டு
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
.jpg)
அம்பாறை கிரிட் உப மின் நிலையத்தின் திருத்த வேலைகள் காரணமாக நாளை (16) ஞாயிற்றுக்கிழமை அம்பாறை, கல்முனை ஆகிய மின் பொறியியலாளர் பிரிவுகளில் மின் விநியோகம் தடைப்படுமென அம்பாறை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்தார். அம்பாறை நகர், கெமுனுபுர, கொண்டவட்டுவான், பிறகான, நாமல் ஓயா, இங்கினியாகல, உகண, கொணாகொல்ல, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணமை, தீகவாபி, மல்வத்த, வளத்தாப்பிட்டி, சம்மாந்துறை, கல்முனை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பெரியநீலாவணை, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் மின்தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு மின் பொறியியலாளர் பிரதேசங்களிலும் அன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கான போனஸ் உறுப்பினர்கள் பெயர் அறிவிப்பு. கிழக்கிலிருந்து ஒரு தமிழர்.
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

நடைபெற்று முடிந்து வடமத்திய, கிழகக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு கிடைத்த 6 போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 6 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன. ஒரு மாகாணத்திற்கு 2 ஆசனங்கள் வீதம் குறித்த 6 ஆசனங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் அனுப்பி வைத்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்திற்கு சுசில் குணரத்னவும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு ஜெயந்த மாரசிங்கவும். வடமத்திய மதகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கேகாலை மாவடடத்திலிருந்து ஆனந்த மில்லங்கொடவும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து அநுரபிரிய நமிந்தவும், சப்ரகமுவ மாகாண சபைக்கு சுதந்திர கூட்டமைப்பின் போனஸ் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மகாண சபைக்கு அமபாறை மாவட்டத்திலிருந்து டி.எம்.ஜயசேனவும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து துரையப்பா நவரட்னராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவு...
மு.கா வின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நாமே ஆட்சியமைப்போம்:கெஹெலிய
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-

அரசாங்கத்தின் கதவு சிகையலங்கார நிலையத்தின் கதவைப் போன்றதாகும். அக் கதவினூடாக எவர் வேண்டுமானாலும் வரலாம்; யார் வேண்டுமானாலும் சென்றுவிடலாம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் வந்துசெல்வர். இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் ௭ன்பதில் ௭வ்விதமான சந்தேகமும் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஆட்சியமைக்க முடியாது ௭ன்றில்லை ௭ன்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். விருப்பு வாக்குமுறைத் தேர்தல் ௭ன்பதனால் பேரப்பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆட்சியமைப்பதாயின் யாரும் சும்மா வரமாட்டார்கள் அதற்காகக் கேட்டதை ௭ல்லாம் கொடுக்கவும் முடியாது ௭ன்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ௭ழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக ஊடகவியலாளர்கள் மூன்று மாகாண சபைகளுக்குமான முதலமைச்சர்கள் யார்? கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சியமை...