மூன்று மாகாண சபைகளுக்கு நாளை தேர்தல்: 108 பேரை தெரிவு செய்ய 3073 பேர் போட்டி
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து. 108 உறுப் பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை 08 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறு கிறது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார். மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை மூவாயிரத்து 73 (3073) வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். 2011 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் (33,36,417) வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்கெடுப்புக்கென தேர்தல்கள் திணைக்களத்தினால் மூன்று மாகாண சபைகளுக்குமுரிய 37 தேர்தல் தொகுதிகளில் மூவாயிரத்து 247 (3,247) வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்கள