அக்கரைப்பற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஜனாதிபதி; கிழக்கு மாகாணத்தின் இறுதி பிரசாரத்தில் பங்கேற்ப்பு!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று அக்கரைப்பற்று பொது மைதானத்தில் உள்ளுராட்ச்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். அதிதிகளாக அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, நிமால் சிறிபால டி சில்வா, பி.தயரத்ன, றோஹித அபேகுணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், சட்டத்தரணி சிறியாணி, சரத் வீரசேகர உட்பட வேட்பாளர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஜமாலியா சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட மதத் தலைவர்கள் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment