தேர்தல் நடைபெறும் மாகாணங்களின் சகல பாடசாலைகளும் நாளை மூடப்படும்!


கிழக்கு ,சப்ரகமுவ ,வடமத்திய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலையொட்டி  இம்மூன்று மாகாண சபைகளிலுள்ள சகல பாடசாலைகளுக்கும்  நாளைய தினம்  (07ம் திகதி) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

செப்.8ம் திகதி சனிக்கிழமை மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.அதனை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களாக இப்பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதால்  நாளைய தினம்   வெள்ளிக்கிழமை இப்பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டு மென்று தேர்தல் ஆணையாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க  கல்வியமைச்சு இவ் வறிவித்தலை விடுத்துள்ளது.


 கிழக்கு மாகாண கல்வியமைச்சினூடாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தலை விடுக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்