Posts

Showing posts with the label தேர்தல்

அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் வெளியிடுவதை தவிர்க்கவும்

Image
அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். சட்டத்தை மதிக்கும் பிரஜைகளிடம் இவ்வாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன் , பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் உறுதிசெய்யப்பட்டு தேர்தல் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியே அதன் பெறுபேறுகளை வெளியிடுவார். அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த பெறுபேறு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து தேர்தல் முடிவுகளும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிடமுடியும்

Image
உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தையும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர் மத்தியில் அவர் உரையாற்றினார் . ஒட்டுமொத்தமாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பு சுமார் 60சதவீதமாக காணப்பட்டதாகவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். தேர்தலின்போது பொதுமக்களும் அனைத்து கட்சிகளும் அமைதியை பாதுகாத்தமைக்காக ஆணைக்குழுவின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளதுடன் அமைதியான முறையில் வன்முறையற்று தேர்தல் நடைபெற்றதையிட்டு தான் பெருமைப்படுவதாகவும் அவர்; கூறினார். வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்த அவர் மொத்த வாக்குப்பதிவு வீதம் மேலும் அதிகரிக்ககூடும் என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும் வாக்குகள் எண்ணும் பணியும் அமைதியான முறையில் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 66 ஆயிரம் பொலிசார்.

Image
சனிக்கிழமை நடைபெறவுள்ள உளளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுவார்கள்  என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர தெரிவித்தார். இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.    இவர்கள்   நாளை  கடமைகளை தொடங்குவார்கள் என திரு.குணசேகர கூறினார்.    முப்படைகளை தேர்தல் வாக்களிப்புக்கு பின்னர் கடமையில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் சேவையை பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.    அவர் நேற்றுசூ  கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்  ஊள்ளுராட்சி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும். வேட்பாளர்கள் இரவு 9 மணிக்குப் பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்க முடியாது. தமது அலுவலகங்களில் கட்சி சின்னங்களையோஇ கொடிகளையோ காட்சிப்படுத்த முடியாது என்று

மருதமுனை 3ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை திறப்பு விழா

Image
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில்; மருதமுனை 3ஆம் வட்டாரத்தில்(ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு)மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வை.கே.றகுமான் அவர்களுக்கான கிளை அலுவலகம் திறந்து வைத்த நிகழ்ம்வும் .கூட்டமும் வேட்பாளர் வை.கே.றகுமான் தலைமையில் சனிக்கிழமை(06-01-2018)நடைபெற்றது.இங்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைத்த்தார்.இதில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி> கட்சியின் செயலாளர் சுபைதீன் ஹாஜியார் > முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்;> கே.எம்.அப்துல் றஸாக்> கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்> அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் கலீல் முஸ்தபா ஆகியோருடன் பெரும் அளவிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கு உறுதிசெய்யும் பணி இன்று

Image
தபால் மூல வாக்கு அட்டை உள்ளடக்கிய பொதிகளை விநியோகிப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் தெரிவித்தார். உத்தியோக வாக்காளர் அட்டை தொடர்பான அறிவிப்பு ஆவணங்களை விநியோகிப்பதற்காக அவை தபால் திணைக்களத்திடம் எதிர்வரும் 18ஆம் திகதி ஒப்படைக்கப்படும். எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆள் அடையாளஅட்டையை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறுமேலதிக தேர்தல் ஆணையாளர் எம் எம் மொகமட் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் துரிதம்

Image
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறும். அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 18ம் திகதி ஆரம்பமாகும். தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு . பொலிசாரும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொலிசார் செயற்படுகின்றனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் வேட்பாளர்கள் தற்போது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சிகளின் பங்களிப்புடன் முக்கிய கூட்டங்கள் நடைபெறுகின்றன. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களை தெளிவுபடுத்தி வருகின்றனர். முடிந்தளவு தேர்தல் விதிமுறைகளை மீறப்படாத வகையில் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்

இரண்டு கட்டங்களின் கீழ் தபால்மூல வாக்களிப்பு

Image
அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ம் திகதி தேர்தல் அலுவலகங்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. ஏனைய தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ம் 26ம் திகதிகளில் இடம்பெறவிருப்தாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறினார்

தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்

Image

விளக்கங்களுக்கு மாவட்டதெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும்

Image
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதி ரீதியில் நடைபெறவுள்ளது. இதனால் இது குறித்து  வேட்பாளர்களுக்கோ வாக்காளர்களுக்கோ விளக்கம் அவசியம தேவையெனில் அவர்கள் மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும். தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்   நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுதி வாரியாக நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில், வாக்காளர்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. என்றும் குறிப்பிட்டார். புதிய முறை தேர்தல் குறித்து உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே சரியான தெளிவு இல்லாததால், அவர்களுக்குத் தெளிவுபடுத்த மாவட்ட ரீதியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

வேட்புமனுக்களை மீள் பரிசோதிக்கும் பணிகள் ஆரம்பம்

Image
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீண்டும் பரிசோதிக்கும் பணிகள் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலகங்களில் கையளிக்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பெறப்பட்டு இந்த பரிசீலனை இடம்பெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நான்கு மாவட்டங்களின் வேட்புமனுக்கள் உதவி தேர்தல் ஆணையாளர்களினால் தேர்தல்கள் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்றைய தினம் மேலும் எட்டு மாவட்டங்களின் உறுதிப்படுத்தப்பட்ட வேட்புமனுக்களின் பிரதிகளை உதவி தேர்தல் ஆணையாளர்கள் எடுத்து வந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் பரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் வாக்காளர் பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கான வேட்பு மனு

Image
  கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 9 கட்சிகளும் 6 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன. இவற்றில் 2 சுயேற்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கலுக்காக  அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு  வருகை தந்த  அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்

Image
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதற்காக இரண்டு கட்டங்களாக வேட்புமனு கோரப்படவுள்ளது. முதற்கட்டமாக 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்கப்படும். இரண்டாவது கட்டமாக ஏனைய 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகளை ஏற்பதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மட்டத்தில் இவை ஸ்தாபிக்கப்படும். எதிர்வரும் வியாழக்கிழமை தெரிவத்தாட்சி அதிகாரிகள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் டிச. 15 வரை ஏற்கப்படும்

Image
தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் டிச. 15 வரை ஏற்கப்படும் தற்போது வேட்பு மனு கோரப்பட்டுள்ள, சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை, குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. குறித்த முடிவுத் திகதி மீண்டும் நீடிக்கப்படாது எனவும், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு ஆணையகம் மேலும் அறிவித்துள்ளது. 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரல் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு டிசம்பர் 13 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்தவும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யவும் முடியும் என தேர்தல்கள் ஆணையகம் நேற்று (27) அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் இல்லை

Image
இன்று வெளியிடப்பட்ட 93 சபைகளுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் சபைகள்...... 1. நாமல் ஓயா பிரதேச சபை 2. தெஹியத்தகண்டிய பிரதேச சபை 3 பதியத்தலாவ பிரதேச சபை, 4. அக்கரைப்பற்று மாநகர சபை, 5. அட்டாளைச்சேனை பிரதேச சபை, 6.லஹுகல பிரதேச சபை, 7.கரைதீவு பிரதேச சபை, 8.சம்மாந்துறை பிரதேச சபை 9.அக்கரைப்பற்று பிரதேச சபை, 10.நாவிதன்வெளி பிரதேச சபை 11.இறக்காமம் பிரதேச சபை 12.ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய திருத்தச் சட்டத்தின் முறையில் நடைபெறும் தேர்தல் வேப்புமனு நியமனங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை 11 டிசம்பர் 2017 ஆம் திகதி தொடக்கம் 14 டிசம்பர் 2017 ஆம் திகதி நண்பகல்  12 மணியுடன் முடிவடையும். ஆனால் அம்பாரை மாவட்ட தமிழ் மொழி பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் இல்லை.

தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதி வெள்ளிக்கிழமை அறிவிப்பு

Image
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.

உள்ளூராட்சிச் ச​பை தேர்தல் டிசம்பர் மாதம் 09ஆம் திகதி?

Image
உள்ளூராட்சிச் ச​பை தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கு தமது பெயரை பதிவு செய்து கொள்வதற்கு மக்கள் அக்கறை செலுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே வாக்காளர் இடாப்பு குறித்து மக்கள் அதிகளவில் சிந்திப்பதில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் நிலை, அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் இந்த நிலை உருவாகியிருக்கக் கூடும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

புதிதாக பதிவு செய்வதற்காக 95 கட்சிகள விண்ணப்பம்

Image
புதிதாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள அரசியல் கட்சிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 95 கட்சிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போது 16 கட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடவுள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 64 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் பதிவு தொடர்பிபாக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் 2நாள் வதிவிடப் பயிற்சிநெறி

Image
( எஸ்.எல். அப்துல் அஸீஸ்)  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நடாத்திய வாக்காளர் பதிவு தொடர்பாக   பயிற்றுவிப்பாளர் களை பயிற்றுவிக்கும்  2நாள் வதிவி டப் பயிற்சிநெறி  கண்டி தேசத்தைக்  கட்டியெழுப்புவோர் அமைப்பின்  பயிற்சி நிலையத்தில் கடந்த 4,5ஆம் திகதிகளில் இடம்பெற்றது.  இதில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்க, மாகாண  மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட ஐம்பது  பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.  கபே அமைப்பின் தேசிய அமைப்பாளரான எ.எ. மனாஸ் தலைமையில் இடம்பெற்ற  இப் பயிற்சிநெறியில் வளவாளர் களாக முன்னாள் தேர்தல் உதவி ஆணையாளரும்,சீதவாக்கே பிரதேச செயலாளருமான பண்டார யாப்பா, சட்டத்தரணி ஹரேந்திர வானக்கள ஆகியோர்கள் உட்பட  கபே அமைப்பின் உயர் மட்ட உத்தியோகத்த்கர்கள் சிலரும்  கலந்துகொண்டனர்.

தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான கருத்துக்களை கண்டறியும் செயலமர்வு

Image
உத்தேச அரசியலமைப்புக்கான சீர் திருத்தங்கள் மீதான பொது மக்கள் யோசனைகள் முன் வைக்கப்படவுள்ள இச்சந்தர்ப்பத்தில் அம்பாறை மாவட்ட பொது மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வு  எதிர் வரும் 27,28 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. உத்தேச அரசியலமைப்பு சீர் திருத்தத்தில்  ஒரு அங்கமான தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான கருத்துக்களை கண்டறியும் செயலமர்வு  தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (20.02.2016) அம்பாறை மாவட்டத்தில் நடை பெற்றது.  இந்த செயலமர்வு  சேனைக்குடியிருப்பு சேவோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் கல்முனை சுப்பர் ஸ்டார் விடுதியில் இடம் பெற்றது.  அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த கல்விமான்கள்,புத்தி ஜீவிகள் , அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டனர். பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் சபாநாயகம் ஸ்ரீதரனின் வழிகாட்டுதலுடன் இடம் பெற்ற இக்கருத்தரங்கில் அரசியலமைப்பு திருத்தத்தின் போது தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான வேட்பாளர்கள் தெரிவு  செய்தல், கட்சி மாறுதல், தேர்தல் பிரச்சார

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகஅம்பாறை மாவட்டத்தில் தெரிவானோர்

Image
அம்பாறை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் நால்வர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் சிசிரகுமார  தெரிவித்தார்.  இதற்கிணங்க,அம்பாறை தேர்தல் தொகுதியிலிருந்து உஹன பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எச். நிபுன அமித பந்து 301 வாக்குகளையும் கல்முனைத் தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் முஹம்மத் டில்ஷாத் 230 வாக்குகளையும் பொத்துவில் தேர்தல் தொகுதியிலிருந்து அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தாவூத் லெப்பை முஹம்மத் ஷாஹிர் 519 வாக்குகளையும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த இராசதுரை லிகிர்தன் 450 வாக்குகளையும் பெற்றுத் தெரிவாகியுள்ளனர்.