விளக்கங்களுக்கு மாவட்டதெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும்

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதி ரீதியில் நடைபெறவுள்ளது.
இதனால் இது குறித்து  வேட்பாளர்களுக்கோ வாக்காளர்களுக்கோ விளக்கம் அவசியம தேவையெனில் அவர்கள் மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும். தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்
 
நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுதி வாரியாக நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில், வாக்காளர்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. என்றும் குறிப்பிட்டார்.
புதிய முறை தேர்தல் குறித்து உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே சரியான தெளிவு இல்லாததால், அவர்களுக்குத் தெளிவுபடுத்த மாவட்ட ரீதியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது