அனைத்து தேர்தல் முடிவுகளும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிடமுடியும்
உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தையும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர் மத்தியில் அவர் உரையாற்றினார் .
ஒட்டுமொத்தமாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பு சுமார் 60சதவீதமாக காணப்பட்டதாகவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
தேர்தலின்போது பொதுமக்களும் அனைத்து கட்சிகளும் அமைதியை பாதுகாத்தமைக்காக ஆணைக்குழுவின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளதுடன் அமைதியான முறையில் வன்முறையற்று தேர்தல் நடைபெற்றதையிட்டு தான் பெருமைப்படுவதாகவும் அவர்; கூறினார்.
வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்த அவர் மொத்த வாக்குப்பதிவு வீதம் மேலும் அதிகரிக்ககூடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வாக்குகள் எண்ணும் பணியும் அமைதியான முறையில் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment