தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 66 ஆயிரம் பொலிசார்.
சனிக்கிழமை நடைபெறவுள்ள உளளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர தெரிவித்தார்.
இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இவர்கள் நாளை கடமைகளை தொடங்குவார்கள் என திரு.குணசேகர கூறினார்.
முப்படைகளை தேர்தல் வாக்களிப்புக்கு பின்னர் கடமையில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் சேவையை பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அவர் நேற்றுசூ கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ஊள்ளுராட்சி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும். வேட்பாளர்கள் இரவு 9 மணிக்குப் பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்க முடியாது. தமது அலுவலகங்களில் கட்சி சின்னங்களையோஇ கொடிகளையோ காட்சிப்படுத்த முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment