மருதமுனை 3ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை திறப்பு விழா


கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில்; மருதமுனை 3ஆம் வட்டாரத்தில்(ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு)மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வை.கே.றகுமான் அவர்களுக்கான கிளை அலுவலகம் திறந்து வைத்த நிகழ்ம்வும் .கூட்டமும் வேட்பாளர் வை.கே.றகுமான் தலைமையில் சனிக்கிழமை(06-01-2018)நடைபெற்றது.இங்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைத்த்தார்.இதில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி> கட்சியின் செயலாளர் சுபைதீன் ஹாஜியார் > முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்;> கே.எம்.அப்துல் றஸாக்> கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்> அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் கலீல் முஸ்தபா ஆகியோருடன் பெரும் அளவிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.




Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்