கல்முனை - கனடா நண்பர்கள் நட்புறவு ஒன்றியம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் கையளிப்பு
www.kalmunainews.com கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை கல்முனை - கனடா நண்பர்கள் நட்புறவு ஒன்றியம் வழங்கி வைத்துள்ளது. ஒன்றியத்தின் தலைவி டொக்டர் புஷ்பலதா லோகநாதன் தலைமையிலான குழுவினரால் இன்று (10) கல்முனை வடக்கு வைத்தியசாலை வைத்திய அதியட்சகர் ஆர்.முரளீஸ்வரனிடம் பெறுமதியான இந்த உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன. கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் உயர்பாதுகாப்பு கருதி இந்த உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கல்முனை - கனடா நண்பர்கள் நட்புறவு ஒன்றியத்தினால் முதல் கட்டமாக அவசர உதவியாக இவ்வைத்தியசாலைக்கு இந்த உதவியை வழங்கியதாகவும் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மேலும் பல வைத்திய உதவிகளையும் வழங்கவுள்ளதாகவும் ஒன்றியத்தின் தலைவி டொக்டர் புஷ்பலதா லோகநாதன் தெரிவித்தார் . இந்த அசாதாரண சூழலில் பொது ம