கல்முனை - கனடா நண்பர்கள் நட்புறவு ஒன்றியம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் கையளிப்பு

www.kalmunainews.com
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை கல்முனை - கனடா நண்பர்கள் நட்புறவு ஒன்றியம் வழங்கி வைத்துள்ளது.
ஒன்றியத்தின் தலைவி டொக்டர் புஷ்பலதா லோகநாதன் தலைமையிலான குழுவினரால் இன்று  (10) கல்முனை வடக்கு வைத்தியசாலை  வைத்திய அதியட்சகர் ஆர்.முரளீஸ்வரனிடம்  பெறுமதியான இந்த உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் உயர்பாதுகாப்பு கருதி இந்த உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கல்முனை - கனடா  நண்பர்கள் நட்புறவு ஒன்றியத்தினால்  முதல் கட்டமாக  அவசர உதவியாக இவ்வைத்தியசாலைக்கு  இந்த உதவியை வழங்கியதாகவும்   கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மேலும் பல வைத்திய உதவிகளையும் வழங்கவுள்ளதாகவும்  ஒன்றியத்தின் தலைவி டொக்டர் புஷ்பலதா லோகநாதன் தெரிவித்தார் .
இந்த அசாதாரண சூழலில்  பொது மக்களின் நலன் கருதி எமது வைத்தியசாலைக்கு அவசியமான  தேவையாக கருதப்பட்ட வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தக்கூடிய வைத்திய உபகரணங்களை எம்மை தேடி வந்து வழங்கிய கல்முனை - கனடா நண்பர்கள் நட்புறவு ஒன்றியத்திற்கும் அதன் தலைவி டொக்டர் புஷ்பலதா லோகநாதனுக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்