சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (30) மாலை 08 முதல் நாளை (01) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காகவும் கடந்த 21 ஆம் திகதி மாலை முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.