சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்


சர்வதேச ஆதரவைப் பெற்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விஷேட அறிக்கை ஒன்றை விடுத்து பிரதமர் உரையாற்றினார். 

´´இன்று நாம் உலகளாவிய பயங்கரவாதத்தை எதிரக்கொண்டுள்ளோம். அரசியல் ரீதியிலான பயங்கரவாதத்தையே நாம் எதிர்கொண்டிருந்தோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை முஸ்லிம் சமூகத்தினர் எதிர்க்கின்றனர். முஸ்லிம் சமூகத்தினர் இதற்கு எதிராக அனைவரையும் ஒன்று திரட்டி செயற்படவேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

1989 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவவில்லை. இனவாத பிரச்சினை காரணமாக அப்போதைய பயங்கரவாதம் நீண்டநாள் நீடித்தது. தமிழ் சிங்கள புத்தாண்டில் எமது பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெற்று அபிவிருத்தி அடைந்து வரும் நேரத்தில் இந்த பயங்கரவாதம் செயல் இடம்பெற்றுள்ளது. 

இந்த பயங்கரவாதம் மேலும் ஒரு வருடத்திற்கு யுத்தமாக நீடிப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிர் தரப்பினரின் கூச்சல் இடையூறுக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூச்சல் இடுவது புதுமை இல்லை. 

இந்த சந்தர்ப்பத்தில் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்த பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை நிறைவேற்றியுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவின் 3-4 கீழ் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார். 

இந்த சந்தர்ப்பத்திலும் எதிர் தரப்பினர் கூச்சலிட்டு இடையூறு செய்தனர். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூச்சல் இடுபவர்களை பயங்கரவாதிகளாகவே காண்கின்றேன் என்றும் தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் சபை பயங்கரவாதத்துக்கு எதிரான எமது நடவடிக்கைகளுக்கு சகல உதவியும் தருவதாக தெரிவித்துள்ளது. சிங்கபூர், இந்தியா நாட்டு தலைவர்கள் சம்பவத்தை அறிந்து எம்முடன் தொடர்புக் கொண்டனர். பாகிஸ்தான் பிரதமர் சார்பில் அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் என்னுடன் தொடர்பு கொண்டார். 

இதே போன்று ஜப்பான் பிரதமர் அவுஸ்ரேலியா மற்றும் ரஷ்ய நாட்டு தலைவர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டனர். தற்பொழுது எமக்கு சர்வதேச ரீதியில் முழுமையான உதவி கிட்டியுள்ளது. 

நாம் இதனை இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பயன்படுத்துவோம் என்றும் பிரதமர் கூறினார். இந்த பயங்கரவாதத்தில் திட்டமிட்ட நபர்கள் இருக்கின்றனர் .இவர்களை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்து வருகின்றனர். அவசரகால சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கைது செய்வதற்காக அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொலிஸாருக்கும் இந்த அதிகாரம் உண்டு. இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர்களின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை மேற்கொள்வதாகும். நாம் தற்பொழுது சுற்றுலாத் துறையை பாதுகாத்து பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 

இந்த விடயத்தில் பாராளுமன்றம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்களின் ஒத்துழைப்பு பெற்று செயற்படுவோம் இதனை எம்மால் தோற்கடிக்க முடியும். எதிர்க்கட்சியினர் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவது வரவேற்கத் தக்கதாகும். ஆனால் பித்து பிடித்தவர்கள் போன்று செயற்படுவது முறையல்ல´´ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி