தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் இயக்கங்களுக்கு தடை
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் - National Thawheed Jammath (NTJ)
மற்றும்
ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் - Jamathei Millathu Ibraheem zeilani (JMI)
ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் செயற்பட்டுவரும் ஏனைய இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளும் அவசர கால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.04.27
Comments
Post a Comment