தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்


தற்கொலைதாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் இடமொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சாய்ந்தமருதில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத் தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான மொஹமட் சஹரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

கபூர் என்றழைக்கப்படும் மொஹம்மட் ஷரீவ் காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்