சிறுவர்கள் உள்ளிட்ட 146 பேரை பலி கொண்டது அனர்த்தம் (UPDATE)
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும்சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சிறுவர்கள் உள்ளிட்ட 146 ஆக அதிகரித்துள்ளதோடு, 112 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 15 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு நாட்டின் 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வனர்த்தம் காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களை எதிநோக்கியுள்ளன. களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்கள் அதிக உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது. நாளை மழை தொடரும் வாய்ப்பு தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும், தென் மேற்கு ...