தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா அம்பாறை மாவட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
சிரேஷ்ட ஊடகவியலாளரும்தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசா அம்பாறை மாவட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்.லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஏற்பாடு செய்த விஷேட ஒன்றுகூடல் திங்கள்கிழமை(22-05-2017)மாலை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு ஊடகவியலாளர்கள் சார்பில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மீரா எஸ்.இஸ்ஸதீன், எம்.ஏ.பகுறுதீன் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
Comments
Post a Comment