இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 4,93,455 ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93ஆயிரத்து 455ஆக அதிகரித்;துள்ளது.
 
185 நலன்புரி முகாம்கள் இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 
இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிடடார்.
 
இது வரையில் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 113 என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தோற்றுநோய் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட வைத்தியக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம் நலன்புரி முகாம்களில் இதற்கான Nவுலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்