அரசாங்க தகவல் திணைக்களம் 24 மணித்தியாலங்களும் இயங்கும்

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்க தகவல் திணைக்களம் 24 மணித்தியாலங்களும் இயங்கும் தகவல் நிலையம் ஒன்றை அமைத்துள்ளது.
பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, மீட்புப் பணிகளிலும் ஈடபட்டு வருகிறார்கள். தற்சமயம் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையில் இருந்து மக்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலான பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

நிவாரண பொருட்களை பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அலுவலகங்களில் கையளிக்கலாம்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்