தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கே.குணராசாவுக்கு மருதமுனையில் வரவேற்பு
(பி.எம்.எம்.ஏ.காதர்)
சிரேஷ்ட ஊடகவியலாளரும், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசாவுக்கு செவ்வாய்க்கிழமை மருதமுனையில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.மருதமுனையின் பிரபல வர்த்தகரும், சமூகசேவையாளருமான பறகத் டெக்ஸ் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.ஐ.அப்துல் பரீட் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.தினகரன் பத்திரிகையின் அம்பாறை மாவட்ட வாசகர் சுற்றுலாவின் போதே இவருக்கு இந்த வரவேற்பளிக்கப்பட்டது.இதன் போது வாகர்களுக்கு தினகரன் பத்திரிகை இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment