Posts

Showing posts from October, 2015

அட்டப்பள்ளம் அஷ் ஷஹிதா வித்தியாலயத்தில்(காசிமி) நூலக திறப்பு விழா

Image
  சுகாதார பிரதி அமைச்சர்  பைசால் காஸிமின்  நிதி ஒதுக்கீட்டில்  நிந்தவூர் அட்டப்பள்ளம்  அஷ்  ஷஹிதா  வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப் பட்ட  (காசிமி) நூலக திறப்பு விழா  நேற்று வெள்ளிக்கிழமை  கல்லூரி அதிபர் ஏ.மொஹமட்  அன்வர் தலைமையில்  இடம் பெற்றது. சுகாதாரப் பிரதி அமைச்சர்  பைசால் காசிம் பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  கௌரவ அதிதியாகவும் கலந்து  கொண்டு  நூலக கட்டிடத்தை திறந்து வைத்தனர் 

2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பங்களாதேஷில்!

Image
2016 ஆம் ஆண்டுக்கானதும், 13 ஆவதுமான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷில் நடாத்த கிரிக்கெட் சம்மேளம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சிங்கப்பூரில் கடந்த செவ்வாயன்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசி முறை இடம்பெற்ற போட்டிகளில் கூட இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்பாலான போட்டி களில் பங்கேற்று விளையாடி இருந்தது. அடுத்தாண்டு இடம்பெறவுள்ள இப்போட்டி பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி  20 ஓவர் போட்டியாக நடைபெற்று மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பங்களாதேஷத்தில் தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆசிய கோப்பை போட்டி நடைபெறுகிறது. 2012 ஆம் ஆண்டும், 2014 ஆம் ஆண்டும் பங்களாதேஷிலேயே இப்போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. முன்னைய ஆண்டுகளையும் சேர்த்து நோக்கும் போது ஒட்டுமொத்தமாக 5 ஆவது தடவையாக ஆசிய கோப்பை அங்கு நடைபெறுகிறது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் 20 ஓவ...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு நிகழ்வும் இளைஞர் மாநாடும்

Image
பி. முஹாஜிரீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு நிகழ்வு நிகழ்வும் இளைஞர் மாநாடும் (லேஸ் 2015) நிகழ்வு இன்று சனிக்கிழமை (31) சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர; கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இம் மாநாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுன்  இந்நிகழ்வில் கட்சியின்  பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் வனரோபா தேசிய மரநடுகை நிகழ்ச்சி

Image
சுற்றாடல் அதிகார சபையினால்  முன்னெடுக்கப் பட்டுள்ள  "மாணவர் பங்களிப்போடு  வனம் உருவாக்கல்"   வனரோபா  தேசிய  மரநடுகை  நிகழ்ச்சித்  திட்டத்தின் கீழ்  பாடசாலைகளில்  வனத் தோட்டம் அமைக்கும் வேலைத் திட்டம்  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று நடை பெற்றது. கல்லூரி அதிபர்  எம்.சி.எம்.அபூபக்கர்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை .அரபாத்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  மரக் கன்றொன்றை நட்டு  திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.  நிகழ்வில் ஆசிரியர்கள் ,மாணவர்கள்  கலந்து கொண்டனர் 

பெண் கணக்கு எழுதுனர் தேவை

Image
Franklin Construction நிறுவனத்தில் கடமை புரிய பெண் எழுதுனருக்கான விண்ணப்பம் கோரப் பட்டுள்ளது . விருப்பமுள்ளவர்கள்   frank_lin95@yahoo.com என்ற ஈ-மெயில் முகவரிக்கு  அல்லது  21,Temple Road, Kalmunai எனும்  முகவரிக்கு  சுய விபரத்தை அனுப்பி வைக்குமாறு Franklin Construction நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் ஆதார வைத்திய சாலையில் பாரிசவாத நோய் தொடர்பான விழிப்பூட்டல்

Image
ஏ.எல்.எம்.சலீம்  உலக பாரிச வாத தினத்தையொட்டி நிந்தவூர் ஆதார வைத்திய  சாலையில் பாரிசவாத நோய் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கொன்று  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஷஹீலா இஸ்ஸதீன் தலைமையில்  நடை பெற்றது. இக்கருத்தரங்கில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தொற்றா  நோய்ப் பிரிவு  பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ், வைத்திய அதிகாரி ஏ.ஏ.எஸ்.எம்.எஸ் .ஷாபி ஆகியோர் கருத்துரையாற்றுவதையும்  கலந்துகொண்டவர்களில்  ஒரு பகுதியினரையும்   படங்களில் காணலாம் 

சுயாதீன தொலைக்காட்சி பிராந்திய செய்தியாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

Image
சுயாதீன தொலைக்காட்சி பிராந்திய செய்தியா ளர்க ளுக்கான செய்தியிடல்  தொடர்பான ஒரு நாள் செயலமர்வு  பத்தரமுல்ல  பெலவத்தையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு  பணியக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று (29)  நடைபெற்றது.  சுயாதீன தொலைக்காட்சி  செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் லால் ஹேமந்த மாவலகே  தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்  பிரதம அதிதியாக  சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தவிசாளர்  ஹேமசிறி பெர்னாண்டோ   கலந்து கொண்டு உரையாற்றினார்  பிராந்திய செய்தியாளர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் ஆராயப் பட்டதுடன் சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப் பட்டது. நாடு பூராகவும் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர் 

கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான நட்புரீதியான கலந்துரையாடல்

Image
(அப்துல் அஸீஸ்​) கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்ப்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான நட்புரீதியான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த    புதன்கிழமை மாலை  8.00  மணியளவில் கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்  கலந்துரையாடலானது கல்முனைப் பிரதேசத்தில்  தற்போது எதிர்கொள்ளப்படும் சவால்களான  கல்வி அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார வசதிகள், மக்களின் ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தொழில் அபிவிருத்தி போன்ற முக்கிய அம்சங்களில் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. மேலும்  கல்முனைப் பிரதேசத்தின் மேற்குறித்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை  தேசிய அரசாங்கத்தில்  அமைச்சுப் பொறுப்பில் உள்ளவர்கட்கும் அரசியல் சக்தியுள்ளவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் எடுத்தியம்புவதற்காக   ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எஸ்.அப்துஸ் சமத் தலைமையி...

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக மீண்டும் ஜவாத்!

Image
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக மீண்டும் கல்முனை ஜவாத்  இன்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.  கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக பதவி வகித்த ஜெமீல், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டு, அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளராகவும் அவர் குறிப்பிடப்பட்டிருந்தார். இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாக, கட்சியிலிருந்து ஜெமீல் நீக்கப்பட்டமைக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கே தேர்தல்கள் ஆணையாளரால் ஜவாத் நியமிக்கப்பட்டுள்ளார்.  கே.எம். ஜவாத் முதலாவது கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரன்ஜித் மதும பண்டா, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீம...

இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வு

Image
நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும்  நிகழ்வு இன்று  கல்முனை பிரதேச  செயலகத்தில்  நடைபெற்றது,  பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலுள்ள நான்கு இளைஞர்கள் இதில் போட்டியிடுவதற்காக  வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மழைக்கு சாத்தியம்?

Image
நாட்டின் கிழக்கு பாகங்களில் இன்று (28) அதிகளவிலான மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது எனவும் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதான நகரங்களின் காலநிலை நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவு...

அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா வுக்கு கமலதீபம் மலர் வெளியீடும்,நினைவுப் பேருரையும்

Image
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஸ்தாபக உறுப்பினரான அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா அவர்கள் கடந்த 2015-09-24 ம் திகதி இவ்வுலகைவிட்டுப்பிரிந்தார். அன்னாரை நினைவுகூரும் நிகழ்வும் கமலதீபம் எனும் பெயரில் நினைவுமலர் வெளியிடும் நிகழ்வும்  2015-10-27 அன்று கல்முனை நால்வர் கோட்டம் மண்டபத்தில் பேரவையின் தலைவர்  ஜலீல் ஜீ தலைமையில் இடம்பெற்றது. ஆங்கில பாட உதவிக்கல்விப் பணிப்பாளராக ஓய்வு நிலையடைந்த அமரர் கமலாம்பிகை லோகிதராஜா, கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்வி, விளையாட்டுத்துறை, கலை, இலக்கியத்துறை, சமூகப்பணி, என்பவற்றில் தன்னை அர்ப்பணம் செய்ததன் காரணமாக பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் நூல் விமர்சனம் செய்வதிலும் தனது பேச்சாற்றல் மூலமும் வெளிப்படுத்தி சிறந்து விளங்கினார். இவரால் எழுதப்பட்ட “பத்தும் பதியமும்” எனும் நூல் பலராலும் பேசப்படும் ஒரு நூலாகும். சமாதான நீதவானாக திகழ்ந்த இவர் சாமஸ்ரீ தேசகீர்த்தி போன்ற உயர் அந்தஸ்த்துக்களையும் பெற்றிருந்தார். 1930-05-12 ல் இவ்வுலகில் பாதம் பதித்த அமரர் கமலாம்பிகை கல்வி கற்ற குடும்பத்தி...

கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன் சிறுவர் சந்தை

Image
கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன்  முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த சிறுவர் சந்தை அதிபர் சரோஜினி தேவி குமாரலிங்கம்  தலைமையில் நேற்று  (27) கல்லூரியில்  நடை பெற்றது . கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சிறுவர் சந்தையை திறந்து வைத்தார்.