கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான நட்புரீதியான கலந்துரையாடல்

(அப்துல் அஸீஸ்​)


கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்ப்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான நட்புரீதியான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த   புதன்கிழமை மாலை 8.00 மணியளவில் கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்  கலந்துரையாடலானது கல்முனைப் பிரதேசத்தில்  தற்போது எதிர்கொள்ளப்படும் சவால்களான  கல்வி அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார வசதிகள், மக்களின் ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தொழில் அபிவிருத்தி போன்ற முக்கிய அம்சங்களில் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.

மேலும்  கல்முனைப் பிரதேசத்தின் மேற்குறித்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பில் உள்ளவர்கட்கும் அரசியல் சக்தியுள்ளவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் எடுத்தியம்புவதற்காக   ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எஸ்.அப்துஸ் சமத் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், விசேட அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் ஆகியோரும்   கலந்துகொண்டதுடன்,

பொலிஸ் அதிகாரிகள், பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச வைத்தியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், கல்முனைப் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்,  கல்முனை வர்த்தக சங்க பிரதிநிதிகள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர்கள்,  அரச மற்றும் தனியார் திணைக்கள உயர் அதிகாரிகள், மார்க்க அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் என பலரும்  கலந்து சிறப்பித்தனர்.









Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது