2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பங்களாதேஷில்!

2016 ஆம் ஆண்டுக்கானதும், 13 ஆவதுமான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷில் நடாத்த கிரிக்கெட் சம்மேளம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சிங்கப்பூரில் கடந்த செவ்வாயன்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசி முறை இடம்பெற்ற போட்டிகளில் கூட இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்பாலான போட்டி களில் பங்கேற்று விளையாடி இருந்தது.

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள இப்போட்டி பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி  20 ஓவர் போட்டியாக நடைபெற்று மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பங்களாதேஷத்தில் தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆசிய கோப்பை போட்டி நடைபெறுகிறது. 2012 ஆம் ஆண்டும், 2014 ஆம் ஆண்டும் பங்களாதேஷிலேயே இப்போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய ஆண்டுகளையும் சேர்த்து நோக்கும் போது ஒட்டுமொத்தமாக 5 ஆவது தடவையாக ஆசிய கோப்பை அங்கு நடைபெறுகிறது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் 20 ஓவர் முறையில் நடக்கிறது. 50 ஓவர் கொண்ட ஒரு நாள் போட்டியாக தான் இதற்கு முன்பு நடை பெற்று வந்தது. தற்போது முதல் முறையாக 20 ஓவர் முறையில் நடத்தப்படுகிறது.

20 ஓவர் உலககோப்பை போட்டி மார்ச் 11 ஆம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப்போட்டி முன்னதாக இது நடைபெறுவதால் ஆசிய கோப்பையை 20 ஓவராக நடத்த கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப்போட்டியில் 5 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 4 நாடுகளும் நேரடியாக விளையாடும்.

ஆப்கானிஸ்தான், ஓமான், ஹொங்கொங், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து ஒருநாடு தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் நவம்பர் மாதம் நடக்கிறது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளன.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்