சுயாதீன தொலைக்காட்சி பிராந்திய செய்தியாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு
சுயாதீன தொலைக்காட்சி பிராந்திய செய்தியாளர்களுக்கான செய்தியிடல் தொடர்பான ஒரு நாள் செயலமர்வு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று (29) நடைபெற்றது.
சுயாதீன தொலைக்காட்சி செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் லால் ஹேமந்த மாவலகே தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதம அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தவிசாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கலந்து கொண்டு உரையாற்றினார்
பிராந்திய செய்தியாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஆராயப் பட்டதுடன் சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப் பட்டது.
Comments
Post a Comment