Posts

Showing posts from June, 2015

மார்ச் 12 இயக்கம் மக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் வாகன பவனி இன்று

Image
'சிறந்ததோர் அரசியலுக்காக' எனும் தலைப்பில் பவ்ரல் அமைப்புடன் மார்ச் 12 இயக்கம் இணைந்து மக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் வாகன பவனி இன்று திங்கட்கிழமை காலை கல்முனை  நகரில் இடம்பெற்றது.  எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடும் எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கையளிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரம் பொதுமக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  பிரதேச சபை, மாகாணசபை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு வழங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய அளவுகோல்கள் மார்ச் 12, 2015 இல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் கைச்சாத்திடப்பட்ட படங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் சென்றோரிடம் விநியோகிக்கப்பட்டன. கொழும்பிலிருந்து ஆரம்பமான கையெழுத்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் குருநாகல், தலாவ, அனுராதபுரம் , ரமாவ, மதவாச்சி, வவுனியா மன்னார், திருகோணமலை , மட்டக்களப்பு  சென்று இன்று கல்முனை  வந்தனர். .  ...

பொதுத் தேர்தல் காலத்தில் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள்!!

Image
நாடாளுமன்றம்   கலைக்கப்பட்டுவிட்டது   பொதுத்   தேர்தல்   நடைபெறப்   போகின்றது   முஸ்லிம் பகுதிகளில்   தேர்தலை   எதிர்கொண்டு வெற்றி   கொள்வதற்காக மக்கள்   மனங்களை   வென்று வாக்குகளை   சுவீகரிக்க   எமது   அரசியல்வாதிகள்   வரிந்து   கட்டிக்கொண்டு   செயற்படப் போகின்றார்கள் . கொழும்பில்   சொகுசாக   வாழ்ந்தவர்கள்   தற்போது   கிராமப்புறங்களுக்கு   வந்து   மக்களோடு மக்களாக   இருக்கப்போகின்றார்கள் ! சொகுசான குளிரூட்டப்பட்ட காருக்குள் கறுப்புக் கண்ணாடிகளை மூடிக்கொண்டு மக்களையே பாராது சென்றவர்கள் வாக்காளர்களைப் பார்த்து   சிரித்த   முகத்துடன் அன்பாகவும்   அழகாகவும்   பேசப்போகின்றார்கள்! பதுளைப்   பள்ளிவாசலில்   பன்றியை   வெட்டிப்   போடப்பட்டது ,  பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது   போன்ற   சம்பவங்களையும்   ஹலால் ,  ஹபாயா   போன்ற பிரச்சினைகளையும்   கவனத்தில்   எடுக்காமல்   இருந்தவர்கள் ...

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில்

Image
ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   பிரதமர்   ரணில்   விக்ரமசிங்க   ஆகியோரின்   ஏற்பாட்டில்   அலரி   மாளிகை யில்    இன்று  29ஆம்திகதி   இடம்பெற்ற    இப்தார்   நிகழ்வில்   முஸ்லிம்   காங்கிரஸ்   தலைவரும்   அமைச்சருமான   ரவூப்   ஹக்கீம்   உட்பட   அமைச்சர்கள் ,  முன்னாள்   பாராளுமன்ற   உறுப்பினர்கள் ,  வெளிநாட்டு   இராஜதந்திரிகள்   மற்றும்   பிரமுகர்கள்   பலர்   கலந்து   கொண்டனர் .

மனிதாபிமானம் என்றால் இதுதான்! கிழக்கு முதலமைச்சர் வாழ்க!!

Image
க டந்த 14.02.2015 அன்று சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி சீகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து கடந்த  மாதம் விடுதலையாகியிருந்தார்.  உதய சிறியின்  குடும்ப நிலைமையை நேரில் கண்டறிந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  அவளது  குடும்பத்தை  வாழவைக்க  ஆசைப் பட்டார் . அதன் நிமிர்த்தம்   உதய சிறியை அழைத்து   அவளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்பினை வழங்கும் பொருட்டு  சுயவிபர படிவம் ஒன்றை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். விரைவில்  உதயசிரிக்கு  கிழக்கு மாகாணத்தில் அரச தொழில் வழங்கப் படவுள்ளது   இந்த  சம்பவ  நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் ராஜேஸ்வரனும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு மாகாணத்தில் 684 பேருக்கு முதலமைச்சரால் நிரந்தர நியமனம் வழங்கிவைப்பு

Image
கிழக்கு  மாகாணத்தில் பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பலருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் நிரந்தர நியமணம் வழங்கிவைத்தார். உள்ளூராட்சி சபைகளில் பல்வேறுபட்ட தொழில்களுக்கு ஏராளமான இளைஞர் யுவதிகள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையிலேயே பணியாற்றி வந்தனர். தங்களின் குடும்ப நிலமையை சரியாகக் கவனிக்க முடியாமல் குறைந்த வருமானம் போன்ற கஷ்டத்துடன் இத்தனை வருடமாக பணியாற்றியவர்களுக்கான நியமனமே முதலமைச்சரால் வாழங்கிவைக்கப்பட்டன. குறிப்பிட்ட நியமனத்தில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு 131 நியமனங்களும், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு 178 நியமனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு 375 நியமங்களும் வழங்கிவைக்கப்பட்டன. மூன்று மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதுடன்  கெளரவ அதிதிகளாக சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், ஆரியபதி கலபதி, மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்ன, உறுப்பினர்களான, ஆர்.துரைரட்ணம், ராஜ...

தேர்தல் திணைக்கள அறிவுரைகளை மீறும் அரச ஊழியர்களுக்கு3 வருட சிறை

Image
தேர்தல் திணைக்கள அறிவுரைகளை மீறும் அரச ஊழியர்களுக்கு அதிகபட்சம் 3 வருட சிறை தண்டனை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்திற்கமையவே இவ்வதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.   அரச மற்றும் அரச கூட்டுத்தாபன ஊழியர்கள் தேர்தல் திணைக்கள அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில் தண்டிக்கப்படுவர். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த கட்சிக்கே அரச ஊழியர்கள் ஆதரவு வழங்கினர். அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன என தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் கண்காணிப்பு நிறுவனங்களும் அதனை உறுதி செய்துள்ளன.   எனினும் 19ஆம் திருத்தச்சட்டத்திற்கமைய பக்கச்சார்பு அற்ற வகையில் அரச ஊழியர்கள் செயற்படவேண்டும். அதனை மீறும் பட்சத்தில் தண்டனைக்குள்ளாவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.   அரச சேவைகளில் இருந்து தேர்தல் ஆணையாளர் ஓய்வு பெற்றபோதும் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரியவே கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நல்லாட்சிக்காக பாடுபட்டுளைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர்.

Image
நல்லாட்சிக்காக பாடுபட்டுளைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். (28.6.2015) ஞாயிற்றுக்கிழமை கல்குடா பொதுமக்களுக்கான இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு முதலமைச்சர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தும்போது  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்: இலங்கையில் நல்லாட்சியைக் கொண்டுவருவதில் சிறுபான்மை மக்கள் பெரும் பங்காற்றினர், சொல்லப்போனால் தங்கள் உயிர்களை துச்சமென மதித்து நல்லாட்சிக்காக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டுவர அயராது உழைத்தனர். இந்த உழைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பங்கும் அளப்பரியது. ஆனால் நல்லாட்சிக்காக பாடுபட்டுளைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர். சரியாகக் கூறப்போனால் சிலருடைய சொந்தத் தேவைகளை நல்லாட்சி மூலம் நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்ற சட்டத்தைத் திருத்த முயல்கின்றனர். இதனை தன் சமூகம், சிறுபான்மை மக்கள் பாதித்து விடுவார்கள் எ...

மனநோயாளி ஒருவரினால் கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய சிலைகள் சேதம்

Image
கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக இருந்த  இரண்டு சிலைகள் சேதப் படுத்தப் பட்டுள்ளன .  சிலைகளை  சேதப் படுத்தியவர்  பிடிக்கப் பட்டு  வாலிபர்களால்  நயப்புடைக்கப் பட்டு  கல்முனை பொலிசில்  ஒப்படைத்துள்ளனர் . சிலைகளை சேதப் படுத்தியவர்  ஒரு மன நோயாளி என  பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இச்சம்பவம்  நேற்று இரவு 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது . சந்தேகத்தில் கைது செய்யப் பட்டவர் கல்முனை  வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதுடன்  பொலிசாரின் தீவிர விசாரணை இடம் பெற்று வருகிறது . 

தேர்தல்கள் ஆணையாளர் அரச சேவையிலிருந்து ஓய்வு

Image
ஆணைக்குழுக்கள் அமைக்கும் வரையில் பணிகள் தொடர விருப்பம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அரச சேவையி லிருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்றுக் காலை ஓய்வூதிய திணைக் களத்திற்கு சென்ற அவர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்தது. சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தான் தொடர்ந்து கடமையில் இருக்கப்போவதாக தேர்தல் ஆணையாளர் இங்கு தெரிவித்தார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு ஜூன் 6ஆம் திகதி 60 வயது பூர்த்தியானது. இந்த நிலையில் ஏனைய அரசாங்க ஊழியர்களை போன்று ஓய்வுபெறும் வயது பூர்த்தியடைந்துள்ளதால் தானும் ஓய்வுபெற வேண்டியுள்ளதாக தெரிவித்த ஆணையாளர், 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுகையில் பதவி யில் இருக்கும் ஆணையாளர் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கும் வரை ஆணையாளராக தொடர்ந்து செயற்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஓய்வூதிய திணைக்களத்திற்கு சென்ற ஆணையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார். 19ஆவது திருத்தத்தினூடாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட போது இன்னும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது த...

மருதமுனை பறகத் டெக்ஸ் ஆடையகத்தின் மற்றுமொரு ஏழு மாடிகளைக் கொண்ட கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது.

Image
கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் பிரதம அதிதி   (பி.எம்.எம்.ஏ.காதர்) இலங்கையில் புகழ்பெற்ற மருதமுனை பறகத் டெக்ஸ் ஆடையகத்தின் மற்றுமொரு ஏழு மாடிகளைக் கொண்ட கிளை  இன்று (26-06-2015)வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய ஆடையகம் இதுவாகும். பறகத் டெக்ஸ் உரிமையாளரும்,முகாமைத்துவப் பணிப்பாளரும், சமூக சேவையாளருமான  அல்ஹாஜ் எம்.ஐ.ஏ பரீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமானி நிஸாம் காரியப்பர் பிரதம அதிதயாகக் கலந்து  கொண்டு ஆடையகத்தைத் திறந்து வைத்தார். விசேட அதிதியாக் கலந்து கொண்ட மாநகர முதல்வர் சட்ட முதுமானி நிஸாம் காரியப்பரின் பாரியார் ஜனாபா மிஸ்றியா நிஸாம் காரியப்பர் பொருட்களைக் கொள்வனவு  செய்து வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார்.  அதிதிகளாக  கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், கல்முனை பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி ஏ.டபில்.யூ. ஹப்பார்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர்அலி உள்ளிட்ட கல்முனை பிரதேச பிரமுகர்க...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 17ல் நடைபெறும்! புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் 1ல் கூடும்

Image
நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறும் என்று அரச அச்சகர் அறிவித்துள்ளார். முன்னதாக நாடாளுமன்றம் இன்று இரவு முதல் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியின் அறிவிப்பு வர்த்தமானி அறிவித்தல் அச்சிடலுக்காக அரச அச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்தநிலையில் அந்த அறிவித்தலில் தேர்தல் திகதி, வேட்புமனுக் கோரல் திகதி மற்றும் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி என்பன குறிப்பிடப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி வேட்புமனுக் கோரல் ஜூலை 6ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் நடைபெறும். புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் முதலாம் திகதி கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் வர்த்தமானிக்கான அறிவித்தல் அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று நள்ளிரவில் வ...

கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

Image
கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ,கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ,கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பரகதுல்லா  கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார், கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் , கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர்  உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் . மௌலவி ரீ.ஆர் .நவ்பர்  அமீன்  ரமலான் சிறப்புரை நிகழ்த்தினார் 

நட்பிட்டிமுனையில் 20 வருட கால அவல நிலை வீதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸால் உடனடி தீர்வு

Image
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கவனிப்பாரற்று  காடாகவும் ,பள்ளம் மேடாகவும்  , இருழடைந்தும்  கிடந்த நற்பிட்டிமுனை  மையவாடி  வீதிக்கு  நல்ல காலம் பிறந்துள்ளது. குறித்த வீதியில் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒப்பமிட்டு இந்த வீதியின்  அவலத்தை  கல்முனை மாநகர உறுப்பினரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம். முபீதின் கவனத்துக்கு  நேற்று 25.06.2015  எழுத்து மூலம் கொண்டு வந்தனர் . குறித்த விடயத்தை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ,அமைச்சருமான   றிசாத்  பதியுதீனின்  கவனத்துக்கு  மாநகர சபை உறுப்பினர்  கொண்டு வந்த போது  அந்த மக்களின்  நலன் கருதி உடனடியாக  அந்த வீதியையும் நிர்மாணித்து ,அந்த வீதிக்கான மின் இணைப்பையும் வழங்க  உடனடி நடவடிக்கை  எடுத்து அதற்க்கான நிதியும் வழங்கி வைத்தார் . அமைச்சரின் உத்தரவுக்கமைய  இன்று  26.06.2015 இந்த வீதிக்கான  மின்சாரம் வழங்குவதற்கான மின் கம்பங்கள் நடும் வேலை திட்டமும் , வீதி செப்பனி...

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்!

Image
இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தறாவீஹ் எட்டு ரக்அத்தா இருபது ரக்அத்தா என்ற சர்ச்சைக்குள் அரசியல் மயமாகிக் கொண்டிருக்கும் இஸ்லாம்

Image
எம் ஐ. எம். எஸ். அன்வர் சுமார்  முப்பது வருடங்களுக்கு மேலாக> பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின்போது தராவீஹ் எட்டு ரக்அத்தா இருபது ரக்அத்தா? என்ற இக்கேள்வி எழுப்பப்பட்டு மக்கள் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப் படுவதும் இதன்போது எட்டு ரக்அத்தார்  இருபது ரக்அத்தினரை பித்னாவை> பித்ஹத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறித் திட்டித் தீர்ப்பதும் அதேபோன்று இருபது ரக்அத்தினர்  எட்டு ரக்அத்தினரைத் திட்டித் தீHப்பதும்> அதன் பின்னர்  வரும் பெருநாள் தொழுகையில் கூட பிரச்சனைகள் ஏற்படுத்தப்படுவதும் நாம் அறிந்த விடயம். இது மார்க்கத்தில் கூறப்பட்ட விடயம் எனினும் இதற்கு அப்பால் அரசியல் வாதிகள் மார்க்கத்தில் சில விடயங்களைத் திணிக்க முயல்வதை எந்தவொரு ஜமாஅத்தினரும் கண்டுகொள்ளாமல் அவற்றிக்கு ஆதரவு  வழங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. அண்மையில் நமது ஊர்க்கிராமமான சாய்ந்தமருதில் “ஹர்த்தால”; ஒன்று ஏற்பாடாகி அதற்காக இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகையும் அப்பள்ளிவாயல் பேஷ்  இமாமினால் நடாத்தி வைக்கப் பட்டது. இது மார்க்கத்துடன் சம்பந்தப் பட்டதா அல்லது மார்க்க...

மக்கள் மன்றத்தின் நிர்வாகக் குழுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும்

Image
(எஸ் .எம்.எம்.றம்ஸான்) கல்முனை மக்கள் மன்றத்தின் நிர்வாகக்  குழுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும் நேற்று(25) கல்முனை அல்தாப் உணவக மண்டபத்தில் இடம்பெற்றது. நிர்வாகக்  குழுக்கூட்டத்தில்  மக்கள் மன்றத்தின் எதிர்கால வேலைத்திட்டம்கள்  தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், தற்போதைய சமூக அமைப்பில் மக்கள் மன்றத்தின் கடமைப்பாடுகள் என்ற தலைப்பில் நிகழ்வின் அதீதியினா ல்  சிறப்புரையாற்றப்பட்டது.  மக்கள் மன்றத்தின் அழைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் அதீதியாக  சமூக ஆய்வாளர் எம்.ரி.அபுல் கலாம் கலந்துகொண்டதுடன், மக்கள் மன்ற நிர்வாகிகளான பல் துறை சார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம்!

Image
ஏ.எல்.எம்.சலீம்  சம்மாந்துறை மர்ஹும் அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன.  இந்த வைத்தியசாலையின் நிர்வாகமும், சேவைகளும் வைத்திய அத்தியட்சகரான டாக்டர் எம்.பீ.ஏ.அஸீஸ் தலைமையில் சிறப்புற முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக சுகாதார அமைச்சினால் மேலதிகமாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்தே மேற்படி அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.  கடமையிலிருந்து வரும் வைத்திய அத்தியட்சகரின் கடமைக்கு மேலதிகமாகக் கடந்த 24 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற மேலதிக வைத்திய அத்தியட்சகரின் நியமனக் கடிதம் வைத்தியசாலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த நியமனத்தை ஆட்சேபித்து வைத்தியசாலையின் விசேட துறை வைத்தியர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுபணியாளர்களுட்பட சகல தரப்பினரும் இன்று இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.  இந்த 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் கா...