மார்ச் 12 இயக்கம் மக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் வாகன பவனி இன்று

'சிறந்ததோர் அரசியலுக்காக' எனும் தலைப்பில் பவ்ரல் அமைப்புடன் மார்ச் 12 இயக்கம் இணைந்து மக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் வாகன பவனி இன்று திங்கட்கிழமை காலை கல்முனை  நகரில் இடம்பெற்றது.

 எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடும் எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கையளிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரம் பொதுமக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

பிரதேச சபை, மாகாணசபை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு வழங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய அளவுகோல்கள் மார்ச் 12, 2015 இல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் கைச்சாத்திடப்பட்ட படங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் சென்றோரிடம் விநியோகிக்கப்பட்டன. கொழும்பிலிருந்து ஆரம்பமான கையெழுத்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் குருநாகல், தலாவ, அனுராதபுரம் , ரமாவ, மதவாச்சி, வவுனியா மன்னார், திருகோணமலை , மட்டக்களப்பு சென்று இன்று கல்முனை வந்தனர். . 





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்