மனிதாபிமானம் என்றால் இதுதான்! கிழக்கு முதலமைச்சர் வாழ்க!!

டந்த 14.02.2015 அன்று சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி சீகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து கடந்த  மாதம் விடுதலையாகியிருந்தார்.
 உதய சிறியின்  குடும்ப நிலைமையை நேரில் கண்டறிந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  அவளது  குடும்பத்தை  வாழவைக்க  ஆசைப் பட்டார் . அதன் நிமிர்த்தம்   உதய சிறியை அழைத்து   அவளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்பினை வழங்கும் பொருட்டு  சுயவிபர படிவம் ஒன்றை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். விரைவில்  உதயசிரிக்கு  கிழக்கு மாகாணத்தில் அரச தொழில் வழங்கப் படவுள்ளது  
இந்த  சம்பவ  நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் ராஜேஸ்வரனும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி