மனநோயாளி ஒருவரினால் கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய சிலைகள் சேதம்
கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக இருந்த இரண்டு சிலைகள் சேதப் படுத்தப் பட்டுள்ளன . சிலைகளை சேதப் படுத்தியவர் பிடிக்கப் பட்டு வாலிபர்களால் நயப்புடைக்கப் பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைத்துள்ளனர் . சிலைகளை சேதப் படுத்தியவர் ஒரு மன நோயாளி என பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது . சந்தேகத்தில் கைது செய்யப் பட்டவர் கல்முனை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் பொலிசாரின் தீவிர விசாரணை இடம் பெற்று வருகிறது .
Comments
Post a Comment