மருதமுனை பறகத் டெக்ஸ் ஆடையகத்தின் மற்றுமொரு ஏழு மாடிகளைக் கொண்ட கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது.


கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் பிரதம அதிதி  
(பி.எம்.எம்.ஏ.காதர்)
இலங்கையில் புகழ்பெற்ற மருதமுனை பறகத் டெக்ஸ் ஆடையகத்தின் மற்றுமொரு ஏழு மாடிகளைக் கொண்ட கிளை  இன்று (26-06-2015)வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய ஆடையகம் இதுவாகும்.
பறகத் டெக்ஸ் உரிமையாளரும்,முகாமைத்துவப் பணிப்பாளரும், சமூக சேவையாளருமான  அல்ஹாஜ் எம்.ஐ.ஏ பரீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமானி நிஸாம் காரியப்பர் பிரதம அதிதயாகக் கலந்து  கொண்டு ஆடையகத்தைத் திறந்து வைத்தார்.
விசேட அதிதியாக் கலந்து கொண்ட மாநகர முதல்வர் சட்ட முதுமானி நிஸாம் காரியப்பரின் பாரியார் ஜனாபா மிஸ்றியா நிஸாம் காரியப்பர் பொருட்களைக் கொள்வனவு  செய்து வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார். 
அதிதிகளாக  கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், கல்முனை பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி ஏ.டபில்.யூ. ஹப்பார்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர்அலி உள்ளிட்ட கல்முனை பிரதேச பிரமுகர்கள் வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் பின்னர் இடம் பொற்ற இப்தார் நிகழ்வில்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது. இந்த ஆடையகத்தில் ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைவகைகளும் பாதணிவகைகளும்,பெண்களுக்கான கைப்பை உள்ளிட்ட பல விதமான பொருட்களும் விற்பனைக்கு  வைக்கப்பட்டள்ளன. இன்றைய திறப்பு விழாவில் பெரும் அளவிலான வாடிக்கையாளர் வருகைதந்து ஆடைவகைகளை கொள்வனவு  செய்தமை குறிப்பிடத்தக்கது.   




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று