நல்லாட்சிக்காக பாடுபட்டுளைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர்.
நல்லாட்சிக்காக பாடுபட்டுளைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
(28.6.2015) ஞாயிற்றுக்கிழமை கல்குடா பொதுமக்களுக்கான இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு முதலமைச்சர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இலங்கையில் நல்லாட்சியைக் கொண்டுவருவதில் சிறுபான்மை மக்கள் பெரும் பங்காற்றினர், சொல்லப்போனால் தங்கள் உயிர்களை துச்சமென மதித்து நல்லாட்சிக்காக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டுவர அயராது உழைத்தனர். இந்த உழைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பங்கும் அளப்பரியது.
ஆனால் நல்லாட்சிக்காக பாடுபட்டுளைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர். சரியாகக் கூறப்போனால் சிலருடைய சொந்தத் தேவைகளை நல்லாட்சி மூலம் நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்ற சட்டத்தைத் திருத்த முயல்கின்றனர். இதனை தன் சமூகம், சிறுபான்மை மக்கள் பாதித்து விடுவார்கள் என்று பாராளுமன்றில் துணிச்சலுடன் உரத்துக் குரல்கொடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரை வாய்க்கு வந்ததுபோல தேவையில்லாமல் பேசுமளவுக்கு சிலருக்கு ஆத்திரம் வந்துள்ளது.
அதனால் இன்று தானும் தனது அமைச்சும் சரியாக இருந்தால் போதும் மற்றவர்களைப் பற்றி நமக்கென்ன பிரச்சனை என்று சுகபோகம் அனுபவிக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இன்று சிறந்ததொரு எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களின் சாணக்கியமான தலைவனாக, எதற்க்கும் அஞ்சாத துடிப்பான அரசியல்வாதியாக இன்று குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்துக்காட்டான தலைவர் என்பதனை இன்று இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் மட்டுமால்லாது சிறுபான்மைச் சமூகமே சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
அதுபோல் கடந்த வாரம் பாராளுமன்றில் அமைச்சர் ஹக்கீம் உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்ட விடயமான நல்லாட்சியை உருவாக்க முன்னால் ஜனாதிபதி மகிந்தவை தோற்கடிக்க நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு எமக்கு இன்று கிடைக்கும் பதில்கள் வியப்பாக இருக்கிறது. என்று குறிப்பிட்ட கருத்தை திசைதிருப்பி தாறுமாறாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன.
சிறுபான்மைச் சமூகத்துக்கு ஆபத்தான நிலையில் அமையவிருந்த 20ஆவது திருத்த சட்டத்தில் கொண்டுவந்த மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்கு அமைச்சரவைப் பேச்சாளராக பொறுப்புடன் இருந்து செயல் படவேண்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒழுக்கம் தவறி அமைச்சர் ஹக்கீமுக்கு பேசியிருப்பது எந்த முஸ்லீமாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத கண்டிக்கத்தக்க விடையம். என்பதனையும் அதற்காக அமைச்சர் ராஜித அமைச்சர் ஹக்கீமிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் சாணக்கியமான பரந்த சிந்தனையுள்ள தலைவரென்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீமேயன்றி வேறுயாருமல்ல.
அத்துடன் எதிர்வரும் தேர்தலில் கடந்த காலங்களைப்போன்று நாம் ஒவ்வொருவராகப் பிரிந்து நின்று நமக்கு கிடைக்கவிருக்கும் ஆசனங்களை இல்லாமல் செய்யாமல் அனைவரும் ஒன்றினைந்து நம் சமூகத்தின் குரலாக ஒலிக்கவும் மக்களுக்கான வேலைகளைச் சரியாகச் செய்யவும் ஒற்றுமையுடன் பயணிக்க அனைவரும் கைகோர்த்துச் செயற்பட முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment