Posts

Showing posts from May, 2015

நாங்கள் வாக்களித்தவர்கள் நீர்வழங்கல் அமைச்சராக இருந்தும் நீரின்றி உயிர் துறக்கும் நிலையில் உள்ளோம். நற்பிட்டிமுனை மக்கள்

Image
நன்றி -TamilCNN நாங்கள் வாக்களித்தவர்கள்  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தும் குடிநீரின்றி உயிர்விடும் நிலையிலேயே எங்களது கிராம மக்கள் உள்ளனர். நீண்டகால பிரச்சனையாக இருக்கும் கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சனைக்கு இந்த அரசியல்வாதிகள் இன்றுரை ஒரு நிரந்தர தீர்வை காணாமல் உள்ளார்கள். இவ்வாறு கல்முனை நற்பிட்டிமுனை கிராம மக்கள் மிகவும் மனவேதனையுடன் கூறுகிறார்கள். கல்முனையின் மேற்கே உள்ள நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு கிராமங்களில் நீர்ப்பிரச்சனை நீண்டகால தொடர்கதையாகவே இருந்துவருகிறது. இங்குள்ள கிணறுகளில் நீர் ஊறுவது குறைவு கிணறுகள் அனேகமாக வற்றியே காணப்படும். இக்கிராம மக்கள் நீர் இணைப்பு நீரையே பயன்படுத்திவருகின்றார்கள். கடந்த ஒரு வாரமாக நீர் இணைப்பு மூலமும் கிடைக்கும் நீரும் முற்றாக தடைப்பட்டுள்ளதால் இப்பிரதேச மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்… இவ்விடயம் தொடர்பாக இம்மக்கள் மேலும் கூறுகையில்……. நீரின்றி எங்கள் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றோம் நீண்டகாலமாக எங்களது நீர்ப்பிரச்சனை தீர்க்கப்ப...

அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 175 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

Image
அரச நிர்வாக சேவைக்கு 175 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்து்ளது. அதற்கான தகுதியானவர்களை தேர்தெடுப்பதற்கான நேர்காணல் ஆரம்பிக்கப்  பட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே குறிப்பிட்டுள்ளார். அரச நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்திற்கான உத்தியோகஸ்தர்கள் தெரிவிற்காக, கடந்த வருடம் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் பெற்றுகொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் புதிய சேவையாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். தெரிவுசெய்யப்படும் உத்தியோகஸ்தர்கள், பயிற்சியின் பின்னர் வெற்றிடங்கள் காணப்படும் பிரதேசங்களுக்கு உள்வாங்கப்படுவுள்ளனர். மேலும் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு ஜூலை மாதமளவில் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்துக்கு பேரீத்தம் பழம் வழங்கப் பட்டு விட்டது! அம்பாறை மாவட்டத்துக்கு எப்போது ?

Image
புனித ரமழான் மாதத்துக்காக சவூதி அரேபியா அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கும் வைபவம் சனிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது.  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த உலமா சபைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தந்தப் பகுதி பள்ளிவாயல் நிர்வாகிகள் ஊடாகப் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு உலமா சபைப் பிரதிநிதிகளிடம் சுமார் 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன.   இந்தப் பேரீச்சம் பழங்களை திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பு முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஹலீமினால் மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை  அம்பாறை மாவட்டத்துக்கு எப்போது வழங்கப் படும் . நோன்பு தொடக்கி முடியும் சந்தர்பத்திலா என  கேள்விகள்   தொடங்கியுள்ளன .

முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்த ஹெல உறுமய சதி! நிஸாம் காரியப்பர் குற்றச்சாட்டு

Image
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும், தனக்கும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஜாதிக ஹெல உறுமய பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாக  கல்முனை மாநகர முதல்வர் எம். நிஸாம் காரியப்பர் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்த நிலைப்பாடு சகல சிறு கட்சிகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த நிலைப்பாட்டைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சவூதி அரேபியா சென்றிருந்த போது அவர் சார்பில் அமைச்சரவை உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைப்பாடு தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சரான றிஷாத் பதியுதீனும் அமைச்சர் திகாம்பரமும் ஏற்றுக் கொண்டு அவர்களும் அதற்கு உடன்பட்டிருந்தார்கள். அதாவது முன்மொழியப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையில் இரண்டு வாக்குச் சீட்டுகள் கொண்டு வரும் பட்சத்தில் அது சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளினால் ஏற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலைப்பாட...

நல்லாட்சியிலும் பள்ளி உடைப்பு கொதிக்கிறார் அதாவுல்லா

Image
பொறளை ஐ}ம்ஆ பள்ளி வாசல் மீது 2015.05.30 இரவு கல்வீச்சு நடாத்தி பள்ளிவாசலுக்கு சேதத்தினை ஏற்படுத்திய சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமனா ஏ.எல்எம் அதாஉல்லா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது , நாட்டில் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற இக் காலகட்டத்திலும் பள்ளிவாசல்கள் மீது அராஐகம் செய்து முஸ்லிம் சமூகத்தினுடைய உணர்வுகளோடு விளையாடுகின்ற இவ்வாறான செயற்பாடுகளை இம் மண்ணில் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.  இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களை பாரபட்சமின்றி உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களை பொறுமை காக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பதிவுகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கான பொது அறிவித்தல்

Image
வீடமைப்பு அமைச்சின் நிதியின் கீழ் வீடுகளைத் திருத்தியமைப்பதற்காக குடும்பமொன்றுக்கு 100,000.00 ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவித்திட்டம் தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் குடும்பப் பதிவுகளைக் ( அ காட்களைக்) கொண்டிருக்கின்ற அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். எனினும் போதியளவு விண்ணப்பங்கள் தம்மை வந்துசேரவில்லை என யாழ்ப்பாணம் பிரதேச செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வீடுகளைப் புனரமைப்பதற்கு கிடைத்திருக்கின்ற இவ்வரிய சந்தர்ப்பத்தினை தவற விடாது பயன்படுத்துவது சிறப்பானது. எனவே தங்களது வீடுகள் அமைந்திருக்கின்ற கிராம அலுவலகர் ஊடாக விண்ணப்பங்களை வழங்கி குறித்த திட்டத்தின் கீழ் பயன் பெறுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவிக்கின்றார். மேலதிக தகவல்களையும் விபரங்களையும் தம்மிடமோ அல்லது குறித்த கிராம ...

அம்பாறை மாவட்ட திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

Image
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்​ ) அம்பாறை மாவட்ட  திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின்  அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று  (30) சாய்ந்தமருது  திவிநெ கும வலய, வங்கி அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது  திவிநெ கும வலய உதவி முகாமையாளர் எம்.எம்.எம்.முபாரக்கின்  ஒருங் கிணைப்பில் இடம்பெற்ற    இந்  நிகழ்வில்  அம்பாறை மாவட்டத்தில்   திவிநெ கும வலய உதவி  முகாமையாளர்   ஒன்றியம் ஆரம்பிக்கப்பட வேண்டிய   அவசியம் தொடர்பாக கருத்துரைகள் கூறப்பட்டதுடன்,   திவிநெ கும வலய உதவி  முகாமையாளர்களின்    தற்போதை ய நிலைப்பாடு,  ஒன்றியதின்  எதிர்கா ல செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. 44 அங்கத்தவர்களைக் கொண்ட  இவ் அமைப்பின் அடுத்த கூட்டம்  எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி அட்டளைச்சேனையில் இடம்பெறவுள்ளது.

கல்முனையில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு பாவனை அதிகரிப்பு!

Image
கல்முனை பிரதேசத்தில்  போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்முனை மாநகரசபை எல்லைக்குள் குறித்த பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் மறைமுகமான இடங்களில் குறித்த பாக்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றது. ஒரு பொட்டலம் 50 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களால் இந்த பாக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. பாடசாலைகளிலும்  பயன்படுத்தப் படுகிறது. இந்த பாக்கு செய்வதற்காக சீவப்பட்ட பாக்கு சுண்ணாம்பில் ஊற வைக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஓடிக்கொலன் இதில் சேர்க்கப்படுவதுடன் இதில் கலக்கப்படும் முக்கியமான போதை பவுடர் இந்தியாவிலிருந்து வருவதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த பவுடர் மற்றவர்களுக்கு காண்பிக்கப்படுவதில்லை. குறித்த பாக்கு வியாபாரத்தை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் அழுத்தங்கள் வரும் போதும் இதனை கட்டுப்படுத்தவோ மாணவர்கள் இதனை பயன்படுத்துவ...

மணிப்புலவர் தமிழ் மொழி ஏட்டுச் சுவடியுடன் ஈரான் பயணம்

Image
ஈரானில் இயங்கி வரும் ஆயத்துல்லா மராஇ அல் நஜசி எனும் தனிப்பட்ட ஒருவரின் நூல் நிலையத்தில் உலகமெங்கினும் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தோலிலும், மரப்பட்டைகளிலும் வேறு சில பொருட்களிலும் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு இற்றைக்கு இரண்டொரு வருடங்களுக்கு முன் அங்கு சென்ற மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்கள் தமிழ் மொழி கையெழுத்து பனை ஓலை ஓட்டுச் சுவடி இல்லாதது கண்டு இலங்கையில் இயங்கி வரும் ஈரான் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக தலைவரும் வதிவிட பிரதிநிதியுமான செய்யத் ஹமீத் றிசா ஹகீகி அவர்களோடு தொடர்புகொண்டு அவரின் அனுசரணையுடன் 03.06.2015 இல் மேற்படி நூல் நிலையத்தில் சேர்ப்பதற்காக ‘அருட்கொடை அண்ணல் நபிசீரு’ எனும் கையெழுத்து ஏட்டுச் சுவடியினை எடுத்துக் கொண்டு இன்று 31.05.2015ல் ஈரான் பயணமாகிறார்.

நல்லாட்சியில் முதலாவது பள்ளி உடைப்பு! றிசாத் ,ஆஸாத் ஸ்தலத்துக்கு விரைவு

Image
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மஸ்ஜித் ஒன்றின் மீது முதல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது , கொழும்பு பொரலையில் மைத்துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது இன்று 30 இரவு தாக்குதல்  நடாத்தப்பட்டுள்ளது. சிறிய ரக வாகனம் ஒன்றில் வந்த நால்வர் குறித்த தாக்குதல்களை மேட்கொண்டுள்ளனர், இந்த தாக்குதல் காரணமாக மஸ்ஜிதின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. புதிய  அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மஸ்ஜித் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் தாக்குதலாக இது அமைத்துள்ளது ,கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பல மஸ்ஜிதுக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியது ஆனால் போதுமான ஆதாரங்கள் இருந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை , இப்போது மஸ்ஜித் ஒன்றின் மீது முதல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் கேள்வி தாக்குதல்களுடன் தொடர்பு பட்டகுற்றவாளிகள் கைது செய்யபடுவார்களா ? அதற்காக பொலிசார் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுப்பார்களா  ? கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா ?, சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் மேற்படி தாக்குதல்களுக்கு புதிய அரசாங்கத்தில் துரித நடவடிக்கைகள...

மண்டூர் கொலையில் கோயில் நிர்வாகமா…? சிக்கியதாம் ஆதாரம்.

Image
நாவிதன்வெளியில் வசிக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் மண்டூர் கோயில் நிர்வாகத்துடன் சில மோசடிச் சம்பங்கள் தொடர்பில் முரண்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசாரிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றிய சில வலுவான புலனாய்வு தகவல்கள் அவர்களிடம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அண்மையில் பட்டப்பகலில் நடந்த இந்தப் படுகொலைச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தது. மிக நீண்ட காலத்தின் பின்னர் இப்படியொரு படுகொலை சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்ட சமூகசேவை உத்தியோகத்தர் மண்டூர் ஆலய நிர்வாகத்தில் இருந்தவர்கள் செய்த நிதிமோசடி மற்றும் ஆலய நில மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும் முகமாக வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆலய நிர்வாகத்தில் இருந்த சிலர் உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர். கொலை செய்வதற்கு வந்திருந்தபோதும் வழக்கை வாபஸ் பெற்று சமாதானமாக செல்லுமாறு கொலையாளிகள் கேட்டுக்கொண்டிருந்தாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகத்தர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் உரிய நடவடிக்கை எடுக...

புனித ரமழானுக்கு சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

Image
புனித ரமழானை  முன்னிட்டு, சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள்  அன்பளிப்பு செய்யப் பட்டுள்ளன . குறித்த பேரீச்சம் பழங்கள், சவுதி தூதரகத்தால், நேற்று மாலை  முஸ்லிம்  விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.   எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கருத்து வௌியிட்ட சவுதித் தூதுவர் கூறியுள்ளார்.  

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்

Image
அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.  ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக நேற்று வரை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இணக்கப்பாட்டுக்கு வர முடியவில்லை. 20வது திருத்தச் சட்டத்தில் இணங்க முடியாத விடயங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு கலந்துரையாடி அடுத்த வாரம், கட்சிகளின் இணக்கத்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

20வது திருத்தச் சட்டத்தால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அரைவாசியாக குறையலாம்?

Image
அமைச்சரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தால், நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் என நான்கு முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் அனுபவித்த தேர்தல் மோசடிகளை நிறுத்தக் கூடிய தேர்தல் முறை சீர்த்திருத்தத்தை தாம் விரும்புவதாகவும், எனினும் அப்படியான சீர்த்திருத்தம் நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் நாடாளுமன்ற அங்கத்துவத்தில் பாரதூரமான பலவீனத்தை ஏற்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி, தேசிய சூரா பேரவை, இலங்கை முஸ்லிம் கவுன்சில் மற்றும் கண்டி ஒன்றியம் ஆகிய முஸ்லிம் அமைப்புகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. புதிய தேர்தல் முறையின் கீழ் சிங்கள இனத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். அதேபோல், தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பறங்கியருக்கும் அப்படியான நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் எனவும் மேற்படி அமைப்புகள் தெரிவ...

கல்முனை மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி -2015

Image
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும், மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக் கிழமை  கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ.கரீம்  தலைமையில் ஆரம்பமான சுற்றுப்போட்யில் 12 கழகங்கள் கலந்துகொள்கின்றன. போட்டிகள்  12 நாட்கள் இடம்பெறவுள்ளது . போட்டியின் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  கலந்து கொண்டு  போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.  கௌரவ அதிதிகளாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ,டபிள்யூ.ஏ.கப்fபார் , கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்  நிறைவேற்றுப் பொறியலாளர் ஏ.எம்.எம்.ஜாபீர் ,மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் சமீம் அவர்களது சகோதரர் எம்.ஐ.எம். அப்துல் றவூப் , கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.றியாஸ் மற்றும் எம்.எஸ்.உமர் அலி போன்றோரும் கலந்து கொண்டனர்....

வைத்திய அத்யட்சகர் R. முரளீஸ்வரன் கல்முனை சிவில் சமூகத்தினரால் கௌரவிப்பு.

Image
 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ராஜரெட்ணம் முரளீஸ்வரன் அவர்கள் அகில இலங்கை ரீதியில் சிறந்த வைத்திய நிருவாகியாக தெரிவு செய்யப்பட்டமையினை இட்டு கல்முனை சிவில் சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  கல்முனை சிவில் சமூக  அமைப்பின் தலைவர் பொன் செல்வநாயகம் தலைமையில்  இடம் பெற்ற  இந்நிகழ்வின் போது சிறந்த வைத்திய நிருவாகியாக தெரிவு செய்யப்பட்ட வைத்திய அத்தியட்சகர் ராஜரெட்ணம் முரளீஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு அவரை பாராட்டி வாழ்த்துப்பத்திரமும் வழங்கப்பட்டது.

நிந்தவூரில் குடும்பஸ்தர் கழுத்தறுத்து கொலை

Image
இனந்தெரியாத நபர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது.  ஒரு குழுந்தையின் தந்தையான சித்தீக் பவுசூன் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். மனைவியையும், குழந்தையையும் பிரிந்து வாழந்து வரும் நிலையில், தொழில் வாய்ப்புக்காக சவுதிக்கு சென்று ஒரு வாரத்துக்கு முன்னரே தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இவர் அதிகாலை ஒரு மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தபோது மறைந்திருந்த சிலர் அவரின் கழுத்தை அறுத்தனர் எனக் கூறப்படுகின்றது. அவர் அபயக்குரல் எழுப்பியதைக் கேட்டு அவரின் பெற்றோர் வெளியே வந்தபோது குற்றுயிராய் கிடந்தவரை உடனடியாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் செலலும் வழியிலியே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரிடி.எம்.ஜே.தஹநக தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொட...

நல்லாட்சியில் குடிக்க நீரில்லை நற்பிட்டிமுனை மக்களின் அவலம் நீடிக்கிறது

Image
நற்பிட்டிமுனை மக்களின் குடிநீர் பிரச்சினை  மனித அவலமாக மாறியுள்ளது. இந்த விடயத்தில் தேசிய நீர் வளங்கள் அதிகார சபை அதிகாரிகளின் அலட்சியப் பூக்கும் ஒரு காரணமாகும் . நற்பிட்டிமுனை பிர தேசத்துக்கு சம்மாந்துறை நீர் சுத்திகரிப்பு நிலையமூடாகதான் நீர் வழங்கப் படுகிறது . வழங்கப் படுகின்ற நீரின் அளவு குறைவாக காணப் படுகிறது . நீர் வழங்கும் விடயத்தில்  சம்மாந்துறை  நீர் சுத்திகரிப்பு  நிலைப் பொறுப்பதிகாரியின் பொறுப்பற்ற தனமே நட்பிட்டிமுனைக்கு நீர் குறைவாக விநியோக்கிகப் படுகிறது.. இந்த அதிகாரிக்கு எதிராக  அமைச்சர் ரவுப் ஹக்கீம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நற்பிட்டிமுனை பிரதேச மக்கள் கேட்கின்றனர். யானைப் பசிக்கு சோழப் பொரி  போடுவது போன்று நீர் தேவையான நற்பிட்டிமுனை மக்களுக்கு பவுசரில் குடி நீர்வலன்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வவ்சரில் வழங்கும் நீருக்கும் மக்கள் காத்திருந்து சண்டை போட்டுக் கொண்டு நீர் பெற வேண்டியுள்ளது . நல்லாட்சியில் நற்பிட்டிமுனை மக்களுக்கு நடக்கும் அநீதியாகும் . 

ஐவர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்பு

Image
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை அந்தஸ்துள்ள  அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஹேமால் குணசேகர ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் சந்திரிசிறி சூரியாராச்சி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 1.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர் 2.பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர். 3. ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய சுற்றாடல்துறை இராஜங்க அமைச்சர். 4. ஹேமல் குணசேகர-வீடு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர். 5. சந்திரசிறி சூரியாராச்சி- காணி பிரதியமைச்சர்.