அம்பாறை மாவட்ட திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் )
அம்பாறை மாவட்ட திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (30) சாய்ந்தமருது திவிநெகும வலய, வங்கி அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது திவிநெகும வலய உதவி முகாமையாளர் எம்.எம்.எம்.முபாரக்கின் ஒருங் கிணைப்பில்இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக கருத்துரைகள் கூறப்பட்டதுடன், திவிநெகும வலய உதவி முகாமையாளர்களின் தற்போதை ய நிலைப்பாடு, ஒன்றியதின் எதிர்கா ல செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
44 அங்கத்தவர்களைக் கொண்ட இவ் அமைப்பின் அடுத்த கூட்டம் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி அட்டளைச்சேனையில் இடம்பெறவுள்ளது.
Comments
Post a Comment