கல்முனையில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு பாவனை அதிகரிப்பு!
கல்முனை பிரதேசத்தில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்முனை மாநகரசபை எல்லைக்குள் குறித்த பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் மறைமுகமான இடங்களில் குறித்த பாக்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றது.
ஒரு பொட்டலம் 50 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களால் இந்த பாக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. பாடசாலைகளிலும் பயன்படுத்தப் படுகிறது.
இந்த பாக்கு செய்வதற்காக சீவப்பட்ட பாக்கு சுண்ணாம்பில் ஊற வைக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஓடிக்கொலன் இதில் சேர்க்கப்படுவதுடன் இதில் கலக்கப்படும் முக்கியமான போதை பவுடர் இந்தியாவிலிருந்து வருவதாக கூறப்படுகின்றது.
எனினும் இந்த பவுடர் மற்றவர்களுக்கு காண்பிக்கப்படுவதில்லை.
குறித்த பாக்கு வியாபாரத்தை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் அழுத்தங்கள் வரும் போதும் இதனை கட்டுப்படுத்தவோ மாணவர்கள் இதனை பயன்படுத்துவதை தடுக்கவோ முடியாத நிலையில் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment