மண்டூர் கொலையில் கோயில் நிர்வாகமா…? சிக்கியதாம் ஆதாரம்.

நாவிதன்வெளியில் வசிக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் மண்டூர் கோயில் நிர்வாகத்துடன் சில மோசடிச் சம்பங்கள் தொடர்பில் முரண்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசாரிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றிய சில வலுவான புலனாய்வு தகவல்கள் அவர்களிடம் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
அண்மையில் பட்டப்பகலில் நடந்த இந்தப் படுகொலைச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தது. மிக நீண்ட காலத்தின் பின்னர் இப்படியொரு படுகொலை சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொல்லப்பட்ட சமூகசேவை உத்தியோகத்தர் மண்டூர் ஆலய நிர்வாகத்தில் இருந்தவர்கள் செய்த நிதிமோசடி மற்றும் ஆலய நில மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும் முகமாக வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆலய நிர்வாகத்தில் இருந்த சிலர் உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர்.
கொலை செய்வதற்கு வந்திருந்தபோதும் வழக்கை வாபஸ் பெற்று சமாதானமாக செல்லுமாறு கொலையாளிகள் கேட்டுக்கொண்டிருந்தாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகத்தர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு பேச்சு வார்த்தையில் ஈடுபடுகொண்டிருந்தபோதே கொலையாளிகள் சமூக சேவை உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் அண்மையில் அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய மோட்டார் சைக்கிளிலேயே வந்துள்ளனர்.
அவர்கள் சுட்ட துப்பாக்கி மைக்ரோ ரக பிஸ்டல் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. தலையில் சுடப்பட்டதனால் இரத்தக்கசிவு மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு பக்கத்தில் சுட்டபோது குண்டு மறுபக்கம் வந்துள்ளாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சாதாரண துப்பாக்கி அல்ல என்றும் அது உயர்மட்டங்களால் பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்றும் கூறப்படுகிறது. இந்தக் கொலையுடன் பல்வேறு இடங்களிலுள்ள நபர்கள் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிகப்பட்டுகிறது.
குறிப்பாக கிழக்கில் தாராளமாக துணைஇராணுவக்குழுக்கள் களமிறக்கப்பட்டிருந்த சமயத்தில், அவர்களிடமிருந்த துப்பாக்கியொன்றே இப்பொழுது வெளிவந்துள்ளதாக அல்லது, துணைக்குழு முக்கியஸ்தர் ஒருவர் இதனுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமென பொலிசார் கருதுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய அதிகாரியொருவர் கருத்து கூறும்போது, கிட்டத்தட்ட கொலையாளிகள் பற்றிய இறுதியான முடிவை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். தற்போது அதிகமாக பேசுவது கொலையாளிகளை உசாரடைய வைத்துவிடும் என கூறினார். JVP - News

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது