நல்லாட்சியிலும் பள்ளி உடைப்பு கொதிக்கிறார் அதாவுல்லா
பொறளை ஐ}ம்ஆ பள்ளி வாசல் மீது 2015.05.30 இரவு கல்வீச்சு நடாத்தி பள்ளிவாசலுக்கு சேதத்தினை ஏற்படுத்திய சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமனா ஏ.எல்எம் அதாஉல்லா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ,
நாட்டில் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற இக் காலகட்டத்திலும் பள்ளிவாசல்கள் மீது அராஐகம் செய்து முஸ்லிம் சமூகத்தினுடைய உணர்வுகளோடு விளையாடுகின்ற இவ்வாறான செயற்பாடுகளை இம் மண்ணில் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களை பாரபட்சமின்றி உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களை பொறுமை காக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment