புனித ரமழானுக்கு சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
புனித ரமழானை முன்னிட்டு, சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்யப் பட்டுள்ளன .
குறித்த பேரீச்சம் பழங்கள், சவுதி தூதரகத்தால், நேற்று மாலை முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கருத்து வௌியிட்ட சவுதித் தூதுவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment