நல்லாட்சியில் குடிக்க நீரில்லை நற்பிட்டிமுனை மக்களின் அவலம் நீடிக்கிறது
நற்பிட்டிமுனை மக்களின் குடிநீர் பிரச்சினை மனித அவலமாக மாறியுள்ளது. இந்த விடயத்தில் தேசிய நீர் வளங்கள் அதிகார சபை அதிகாரிகளின் அலட்சியப் பூக்கும் ஒரு காரணமாகும் .
நற்பிட்டிமுனை பிர தேசத்துக்கு சம்மாந்துறை நீர் சுத்திகரிப்பு நிலையமூடாகதான் நீர் வழங்கப் படுகிறது . வழங்கப் படுகின்ற நீரின் அளவு குறைவாக காணப் படுகிறது . நீர் வழங்கும் விடயத்தில் சம்மாந்துறை நீர் சுத்திகரிப்பு நிலைப் பொறுப்பதிகாரியின் பொறுப்பற்ற தனமே நட்பிட்டிமுனைக்கு நீர் குறைவாக விநியோக்கிகப் படுகிறது..
இந்த அதிகாரிக்கு எதிராக அமைச்சர் ரவுப் ஹக்கீம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நற்பிட்டிமுனை பிரதேச மக்கள் கேட்கின்றனர்.
யானைப் பசிக்கு சோழப் பொரி போடுவது போன்று நீர் தேவையான நற்பிட்டிமுனை மக்களுக்கு பவுசரில் குடி நீர்வலன்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வவ்சரில் வழங்கும் நீருக்கும் மக்கள் காத்திருந்து சண்டை போட்டுக் கொண்டு நீர் பெற வேண்டியுள்ளது . நல்லாட்சியில் நற்பிட்டிமுனை மக்களுக்கு நடக்கும் அநீதியாகும் .
Comments
Post a Comment